சியான் 63 படத்தில் இணைந்த கோமாளி பட நடிகை – வைரலாகு போட்டோ
Actress Samyuktha Hegde In Chiyaan 63 Movie | தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் அடுத்ததாக நடிகர் சியான் விக்ரமின் 63-வது படத்தில் நடிக்க உள்ள செய்தி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பிரபலமான நடிகராக உள்ளார் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னட சினிமாவில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனார். நடிகர் ரக்ஷித் ஷெட்டி நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் தான் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நாயகியாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னட சினிமா மூலம் நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய நடிகை சம்யுக்தா ஹெக்டே அதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு முதல் தெலுங்கு சினிமாவில் நடிகையாக நடிக்கத் தொடங்கினார். இந்தப் படம் முன்னதாக கன்னட சினிமாவில் வெளியான கிரிக் பார்ட்டியின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான வாட்ச்மேன் என்ற படத்தின் மூலமாக நடிக்கத் தொடங்கினார். இந்தப் படத்தில் பெரிய அளவில் அவரது கதாப்பாத்திரம் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் அதனைத் தொடர்ந்து வெளியான கோமாளி படத்தில் இவரது கதாப்பாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




சியான் 63 படத்தில் இணைந்த கோமாளி பட நடிகை:
நடிகர் சியான் விக்ரம் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே, இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இத்திட்டத்தில் தான் இணைவதை அவர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… இளம் வயதில் சிம்பொனி இசையமைத்த லிடியன் நாதஸ்வரம்… பெருமை கொள்ளும் தமிழ் நாடு
சியான் 63 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A mighty and memorable start ❤️
Team #Chiyaan63 is excited to start shoot for the film, led by our @chiyaan Vikram and director @anandshank. @SathyaJyothi @Music_Santhosh @riyashibu_ @RDRajasekar @arjun1on @saisiddharth_ @PoornimaRamasw1 @shankaruppusamy @gopiprasannaa… pic.twitter.com/4u5yIHsK5S
— Sathya Jyothi Films (@SathyaJyothi) June 12, 2026
Also Read… இந்த ஆட்டம் நிக்காது… வசூலில் வியக்க வைக்கும் கருப்பு படம் – கொண்டாட்டத்தில் படக்குழு