ஹபீபி முதல் நிழல் வரை… கோலிவுட் சினிமாவில் நாளை வெளியாகும் புதுப் படங்கள் – லிஸ்ட் இதோ
Here is the list of new movies releasing in Kollywood tomorrow | தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வரிசையில் இந்த வாரம் வெளியாக உள்ள படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்
ஹபீபி படம்: தமிழ் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் எல்லாம் இஸ்லாமியர்களை சித்தரிக்கும் விதம் பெரும்பாலும் தவறானதாகவே இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நன்நடத்தைகளை அப்படியே காட்டி வருகின்றது. இது சற்று ஆறுதல் கொடுக்கும் வகையில் இருந்தாலும் அது போதுமானதா என்றால் கேள்விக்குறியே. காரணம் முந்தைய படங்களில் அவர்களை சித்தரித்த விதம் அப்படி. இப்படி இருக்கும் நிலையில் முழுக்க முழுக்க இஸ்லாமியர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் தற்போது உருவாகி உள்ள படம் ஹபீபி. இந்தப் படத்தை இயக்குநர் மீரா கதிரவன் இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் ஈஷா, கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ், தனஸ்ரீ சுதாகரன், அருள்குமார், அனுஸ்ரேயா ராஜன் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் நாளை 12-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் கண்: தமிழ் சினிமாவில் இயக்குநர் சகோ கணேஷன் எழுதி இயக்கி உள்ள படம் மூன்றாம் கண். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் விதார்த் கதையின் நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நடிகர்கள் கலையரசன், திரிகன், தேஜு அஸ்வினி, சந்தோஷ் பிரதாப், அதுல்யா சந்திரா, ராதா சீனிவாசன், ஜான் விஜய், கேபிஒய் சரத், ஐஸ்வர்யா கே.எஸ், ஸ்வேதா டோரதி என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் நாளை 12-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… நஸ்லேன் பர்த்டே ஸ்பெஷல்… வாழ்த்து கூறிய சூர்யா 47 படக்குழு




டபுள் ஆக்குபன்சி: தமிழ் சினிமாவில் ரொமாண்டிக் ஃபேண்டசி காமெடி பாணியில் உருவாகி உள்ள படம் டபுள் ஆக்குபன்சி. இந்தப் படத்தை இயக்குநர் அஸ்வின் கந்தசாமி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் மூலமாக இவர் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன் மற்றும் VTV கணேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் நாளை 12-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிழல் படம்: க்ரைம் த்ரில்லர் பாணியில் தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி உள்ள படம் நிழல். இயக்குநர் ஏ.கே.குமார் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் ஜனனி குணசீலன், ஸ்ரீ விசாகன் மற்றும் கௌசிக் கோபாலன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் நாளை 12-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… Magudam: ஒரே படத்தில் மூன்று ரோலில் விஷால்.. அவரே இயக்கிய மகுடம் திரைப்படத்தின் டீசர் இதோ!