Magudam: ஒரே படத்தில் மூன்று ரோலில் விஷால்.. அவரே இயக்கிய மகுடம் திரைப்படத்தின் டீசர் இதோ!
Magudam Movie Teaser: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகனாக நடித்து அசத்திவருபவர் விஷால். இவர் தமிழில் இயக்குநராக அறிமுகமாகியுள்ள புதிய திரைப்படம்தான் மகுடம். இப்படத்தில் விஷால் மூன்று வேடத்தில் நடித்துள்ள நிலையில், இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
நடிகர் விஷால் (Vishal) நடிப்பில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. கடந்த 2025ம் ஆண்டில் இவரின் நடிப்பில் வெளியான மத கஜ ராஜா (Madha Gaja Raja) படமானது எதிர்பாராத நல்ல வரவேற்பை கொடுத்தது. இதை கடந்த 2012ம் ஆண்டிலே சுந்தர் சி (Sundar C) இயக்கியிருந்த நிலையில், கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இந்த வரிசையில் இயக்குநர் ரவி அரசு இயக்க, விஷால் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம்தான் மகுடம் (Magudam). இதை இயக்குநர் ரவி அரசு (Ravi Arasu) இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், பின் விஷாலே இப்படத்தை இயக்கிவந்தார்.
இப்படத்தின் ஷூட்டிங் இறுதியை எட்டிய நிலையில், இன்னும் சில தினங்களில் படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது. இதில் நடிகைகள் துஷாரா விஜயன் (Dushara Vijayan) மற்றும் அஞ்சலி (Anjali) இணைந்து நடித்துவருகின்றனர். மேலும் இதில் விஷால் கிட்டத்தட்ட 3 வேடங்களில் நடித்துள்ள நிலையில், அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இன்று 2026ம் ஆண்டு ஜூன் 11ம் தேதியில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நஸ்லேன் பர்தே ஸ்பெஷல்… வாழ்த்து கூறிய சூர்யா 47 படக்குழு
விஷால் பகிர்ந்த மகுடம் திரைப்படத்தின் அதிரடி டீசர் குறித்த எக்ஸ் பதிவு:
After nurturing this dream for 30 years, today my official directorial debut finally steps into the spotlight!
Countless battles. One vision. Today, the crown rises 👑
Proud and super excited to unveil the TEASER of #Magudam / #Makutam.
A Film built with conviction.
A…— Vishal (@VishalKOfficial) June 11, 2026
இப்படத்தில் விஷால் கேங்ஸ்டர், மெடிக்கல் ரெப் மற்றும் அதிரடி நாயகன் என மொத்தம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இதில் அஞ்சலி மற்றும் துஷாரா விஜயன் இணைந்து நடித்துள்ள நிலையில், மேலும் முக்கிய வேடத்தில் யோகி பாபுவும் நடித்துள்ளார். இப்படமானது டைட்டிலுக்கு ஏற்றதுபோலவே ஒரு மகுடத்தை அடைய போராடுவது தொடர்பான கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இப்படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இதையும் படிங்க: சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் – வைரலாகும் அப்டேட்
விஷாலின் மகுடம் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது:
இந்த மகுடம் படத்திற்கு தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துவரும் நிலையில், பாடல்கள் சிறப்பாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசரில் இவரின் இசை சிறப்பாக உள்ளது. இதை மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், இது அவர்களின் 99வது திரைப்படமாகும். அந்த வகையில் இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



