நஸ்லேன் பர்தே ஸ்பெஷல்… வாழ்த்து கூறிய சூர்யா 47 படக்குழு
Naslen Birthday Special Poster | மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நஸ்லேன். இவர் தற்போது நடிகர் சூர்யாவின் 47-வது படத்தில் நடித்து வரும் நிலையில் அந்தப் படக்குழுவினர் நஸ்லேனின் பிறந்த நாள் போஸ்டை வெளியிட்டு உள்ளனர்.
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் நஸ்லேன். இவர் 2019-ம் ஆண்டு நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான மதுர ராஜா என்ற படத்தில் ஒரு பெயரிப்படாத வேடத்தில் நடித்தார். அதன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நஸ்லேன். இந்தப் படத்தை தொடர்ந்து மலையாள சினிமாவில் நடிகர் நஸ்லேன் நடித்தப் படம் தண்ணீர் மதன் தினங்கள். இந்தப் படத்தில் நாயகனின் நண்பனாக நடிகர் நஸ்லேன் நடித்து இருந்தார். தொடர்ந்து இந்த மாதிரியான கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் நஸ்லேன் பிறகு மலையாள சினிமாவில் கதையின் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி நடிகர் நஸ்லேன் நாயகனாக நடித்து கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பிரேமலு. இந்தப் படம் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நஸ்லேன் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் கதையின் நாயகனாக பிசியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் இறுதியாக வெளியான படம் மோலிவுட் டைம்ஸ். சைக்காலஜி டார்க் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.




நஸ்லேனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய சூர்யா 47 படக்குழு:
தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் நஸ்லேன் தற்போது சூர்யா உடன் இணைந்து சூர்யா 47 படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்து வருகின்றது. மேலும் இந்தப் படக்குழுவினர் இன்று நடிகர் நஸ்லேனின் பிறந்த நாளை முன்னிட்டு எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… 6 நாட்களில் ராம் சரணின் பெத்தி படம் வசூலித்தது எவ்வளவு? அப்டேட் இதோ
சூர்யா 47 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Bringing smiles, laughter and unmatched energy to the sets of #Suriya47 every day! ✨
Happy Birthday #Naslen! Wishing you a year packed with happiness, success and all things extraordinary. ❤️#HBDNaslen #ZhagaramStudios pic.twitter.com/HAxsaqUwop
— Zhagaram Studios (@ZhagaramOffl) June 11, 2026
Also Read… அடியே அழகே என் அழகே அடியே… 10 ஆண்டுகளை நிறைவு செய்தது ஒரு நாள் கூத்து படம்