உங்களுக்கு கசின்ஸ் ரொம்ப பிடிக்குமா? அப்போ இந்த கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ் சீரிஸை மிஸ் செய்யாதீர்கள்
Cousins and Kalyanams Malayalam Web Series Update | மலையாள சினிமாவில் உருவாகி தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கும் இணையதள தொடர் கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ். இது எப்படி இருக்கிறது என்பது குறித்த விமர்ச்னத்தை தற்போது பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து திரையரங்குகளில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது போல தொடர்ந்து ஓடிடியில் இணையதள தொடர்களும் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் இணையதள தொடர்கள் அந்த மொழியில் உள்ள ரசிகர்களிடையே மட்டும் இல்லாமல் மற்ற மொழி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் மலையாள சினிமாவில் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் இணையதள தொடர் கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ். ரொமான்ஸ், காமெடி அண்ட் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்த தொடர் மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தற்போது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
மேலும் இந்த கசின்ஸ் அண்ட் கல்யாணம் இணையதள தொடரை இயக்குநர்கள் விஷ்ணு சந்திரன் மற்றும் கண்ணன் தாமரக்குளம் இருவரும் இணைந்து இயக்கி உள்ளனர். இந்த தொடரில் நடிகர்கள் நைனிதா மரியா, நந்திதா, மனஸ்வினி ராம், மான்யா மல்லிகா, சித்தார்த் பாபு, கிருஷ்ணா விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கும் கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ்:
அதன்படி மொத்தம் 60 எபிசோடுகளைக் கொண்ட இந்த மலையாள இணையதள தொடர் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் காணக் கிடைக்கின்றது. இந்த 60 எபிசோடுகளும் வாரம் வாரம் வெள்ளி கிழமைகளில் 4 வீதம் வெளியாகி வருகின்றது. இதுவரை இரண்டு வாரங்களை கடந்த நிலையில் இன்னும் 13 வாரங்களுக்கு தொடர்ச்சியாக 4 எபிசோடுகள் வீதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.




Also Read… Dhruv Vikram: ஆக்ஷன் மோட் ஆன்.. DV4 படத்திற்கான அப்டேட்டை வெளியிட்ட துருவ் விக்ரம்!
கசின்ஸ்கள் 6 பேர் ஒவ்வொரு திருமணத்தின் போதும் சந்தித்துக்கொண்டு தங்களது வாழ்க்கையில் எவ்வளவு நெறுக்கமாக மாறுகிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்த இணையதள தொடர் உருவாகி உள்ளது. இந்த தொடரை தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம். மலையாளம் தெரியாதவர்கள் தமிழ் மொழியை தேர்வு செய்து பார்க்கும் ஆப்ஷனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.