ஜஸ்ட் காட் திங்க்ஸ்… ஓடிடியில் சூப்பர் ஹிட் அடிக்க வரும் கருப்பு – எங்கு எபோது பார்க்கலாம்
Karuppu Movie OTT Release Update | தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் கருப்பு. சூர்யாவின் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து தற்போது ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழக மக்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் சூர்யா நடிப்பில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த படம் கருப்பு. நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் இந்திரன்ஸ் படத்தின் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் அவ்வபோது வெளியாகி வந்தாலும் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் காத்திருந்தனர். அதன்படி பல தடைகளைத் தாண்டி கடந்த மே மாதம் மத்தியில் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் திரையரங்குகளில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது.




ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்தது கருப்பு படக்குழு:
அதன்படி தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒரு படம் திரையரங்குகளில் வெளியாவதில் இருந்து 4 அல்லது 6 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும். உச்ச நட்சத்திரங்களின் படங்கள் என்றால் 8 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும். ஆனால் பல சிக்கல்களை தாண்டி கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் இந்தப் படம் 4 வாரங்கள் முடிவடைவதற்கு முன்னதாகவே ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி படம் வருகின்ற 12-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… Pooja Hegde: எனக்கு என்னிடம் அந்த விஷயம் ரொம்பவே பிடிக்கும்.. அதுவே எனது பலம் – பூஜா ஹெக்டே!
கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
god mode ON 🔥 #KaruppuOnPrime, June 12@Suriya_offl @RJ_Balaji @SaiAbhyankkar @dop_gkvishnu @trishtrashers @prabhu_sr #Indrans @natty_nataraj #Swasika @SshivadaOffcl #SupreethReddy #AnaghaMayaRavi #VikramMor @kalaivananoffl #ArunVenjaramoodu @PraveenRaja_Off @ZeeTamil… pic.twitter.com/VeKFZ4qViA
— prime video IN (@PrimeVideoIN) June 8, 2026
Also Read… ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு பட டீசருக்கான டப்பிங்கை முடித்த விஜய் சேதுபதி