தொடங்கியது நாக சைத்தன்யாவின் சூப்பர் ஹிட் தூதா சீரிஸின் 2-ம் பாகம் ஷூட்டிங்!
Dhootha 2 shootin has begun | தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நாக சைத்தன்யா. இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற தூதா என்ற இணையதள தொடரின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி வெளியானது தூதா இணையதள தொடர். நடிகர் நாக சைத்தன்யா நடிப்பில் உருவான இந்த இணையதள தொடர் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. ஹாரர் மிஸ்ட்ரி த்ரில்லர் பாணியில் உருவான இந்த தொடரை இயக்குநர் விக்ரம் குமார் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்த தொடரில் நடிகர் நாக சைத்தன்யா உடன் இணைந்து நடிகர்கள் பசுபதி, பார்வதி திருவோத்து, ரவீந்திர விஜய், ஜெயபிரகாஷ், ராஜா கௌதம்,
தருண் பாஸ்கர், ஜீவன் குமார், தனிகெள பரணி, ரகு குஞ்சே, பிரியா பவானி சங்கர், ஈஸ்வரி ராவ், பிராச்சி தேசாய், ஸ்ருதி ஜெயன், சத்திய கிருஷ்ணன், ஸ்ரீகாந்த் முரளி, ஞானேஸ்வரி கண்டரேகுலா, ரோகிணி, அனிஷ் குருவில்லா, சைதன்யா கரிகிபதி, ஆயுஷ் அகர்வால், தேஜா ககுமானு, நல்ல ஸ்ரீதர் ரெட்டி, காமாட்சி பாஸ்கர்லா, குருராஜ் மனேப்பள்ளி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
மேலும் இந்த தொடர் மொத்தம் 8 எபிசோடுகளை கொண்டு இருந்தது. மேலும் ஒவ்வொரு எபிசோடும் சுமார் 40 முதல் 45 நிமிடங்கள் வரை இருந்தது. இந்த தொடர் வெளியான போது ரசிகர்களிடையே இது நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் முதல் பாகம் முடிவடையு போதே இரண்டாம் பாகத்திற்கான லீட் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.




தொடங்கியது சூப்பர் ஹிட் தூதா சீரிஸின் 2-ம் பாகம்:
இந்த தொடர் பத்திரிக்கை துறையை சார்ந்தவர்கள் தவறு செய்யும் போது அவர்களுக்கு தொடர்ந்து ஏதேனும் பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த விசயத்தை பின் தொடரும் போது பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் வெளியே வருகின்றது. ஒரு பத்திரிக்கை என்பது ஒருவரின் வாழ்க்கையை எந்த அளவிற்கு மாற்றும் என்பதை இந்த தொடர் வெளிப்படையாக காட்டி இருந்தனர். மேலும் விறுவிறுப்பாக செல்லும் இந்த தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்திற்கான பணியை படக்குழு செய்துள்ளது. அந்த வகையில் இன்று இரண்டாம் பாகத்திற்கான பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியது.
Also Read… தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடிய கருப்பு படத்தின் காட் மோட் வீடியோ பாடலை வெளியிட்டது படக்குழு
நாக சைத்தன்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Auspicious beginnings as I step into the second chapter of Dhootha and my first step as a producer . Onwards and upwards . Here’s to the magic ahead . #dhootha2 @Vikram_K_Kumar @AnnapurnaStdios @nseplofficial @sharrath_marar @Padmak131 @PrimeVideoIN @parvatweets @priya_Bshankar… pic.twitter.com/cReG7A4mbi
— chaitanya akkineni (@chay_akkineni) June 5, 2026
Also Read… கோலிவுட் முதல் டோலிவுட் வரை… இந்த வாரம் தென்னிந்திய சினிமாவில் புது வரவுகளின் லிஸ்ட்