AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அங்கீகாரம் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு!

Angikaaram Movie Censor Update | தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்தவர் கே.ஜே. ராஜேஷ். இவர் தமிழ் சினிமாவில் தற்போது நாயகனாக அறிமுகம் ஆகிறார். அவர் நாயகனாக அறிமுகம் ஆகும் அங்கீகாரம் படத்தின் சென்சார் குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

அங்கீகாரம் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு!
அங்கீகாரம்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Jun 2026 14:50 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜே. ஸ்டூடியோவின் தயாரிப்பாளர் கே.ஜே. ராஜேஷ். இவர் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து உள்ளார். அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு இயக்குநர் கோபி நயினார் எழுதி இயக்கி நடிகை நயன்தாரா முன்னணி வேடத்தில் நடித்த அறம் என்ற படத்தை இயக்கினார். இதுதான் தமிழ் சினிமாவில் இவரது தயாரிப்பில் வெளியான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளராக கே.ஜே.ராஜேஷ் அறிமுகம் ஆன முதல் படமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து கே.ஜே.ராஜேஷ் தயாரிப்பில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் ஹீரோ, கா/பெ ரணசிங்கம், டாக்டர், டிக்கிலோனா மற்றும் அயலான் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியானது.

இதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படம் தான் இறுதியாக இவர் தயாரித்த படம் ஆகும். இந்தப் படத்தில் தனக்கு சுமார் 160 கோடி இழப்பு ஏற்பட்டதாக தயாரிப்பாளர் கே.ஜே.ராஜேஷ் சமீபத்தில் ப்ரஸ் மீட்டில் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த கே.ஜே.ராஜேஷ் தற்போது நடிகராக அறிமுகம் ஆக உள்ளார்.

அங்கீகாரம் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு:

அதன்படி கே.ஜே.ராஜேஷ் தமிழ் சினிமாவில் நாயக்னாக அறிமுகம் ஆகும் படம் அங்கீகாரம் ஆகும். இந்தப் படத்தில் இளம் ஓட்டப்பந்தய வீரராக கே.ஜே.ஆர்.நடித்துள்ளார். மேலும் இந்தப் படம் கோர்ட் ரூம் பாணியில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஜே.பி. தென் பதியன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் படம் வருகின்ற 25-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் சென்சார் தொடர்பான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்திற்கு சென்சார் குழு யு சான்றிதழை வழங்கியுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… கமல் ஹாசன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான விக்ரம் படம் 4 ஆண்டுகள் நிறைவடைந்தது

அங்கீகாரம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… வெய்டிங் ஓவர்… தொடங்கியது பரிமளா & கோ படத்தின் டிக்கெட் புக்கிங்!

Follow Us