AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொதுவா பொம்பளைக்கு புருஷனா இருக்கதே கஷ்டம்… காமெடி – ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது கட்டா குஸ்தி 2 டீசர்

Gatta Kusthi 2 Movie Teaser | நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லெட்சுமி நடிப்பில் முன்னதாக சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கட்டா குஸ்தி படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

பொதுவா பொம்பளைக்கு புருஷனா இருக்கதே கஷ்டம்… காமெடி – ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது கட்டா குஸ்தி 2 டீசர்
கட்டா குஸ்தி 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Jun 2026 17:32 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கட்டா குஸ்தி. ரொமாண்டிக் ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் செல்ல அய்யாவு. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி நடித்து இருந்தார். இந்தப் படத்தில் குஸ்தி வீராங்கனையான ஐஸ்வர்யா லெட்சுமி படிப்பு மற்றும் குஸ்தியை மறைத்து மிகவும் அடக்க ஒடுக்கமான பெண் என்று நடிகர் விஷ்ணு விஷாலுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.

இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்த பிறகு விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லெட்சுமி இடையேயான உறவு என்ன ஆனது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ஸ்போர்ஸ்ல இருக்க பொம்பளைக்கு புருஷனா இருக்கது அவ்வளவு கஷ்டம்:

முதல் பாகத்தில் கணவர் மனைவியை அடக்கும் நபராக இருந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் மனைவியின் லட்சியத்திற்காக போராடும் கணவராக உள்ளார். இந்தப் படம் முதல் பாகத்தைவிட மிகவும் கலகலப்பாகவும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்ததாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கட்டா குஸ்தி 2 படம் வருகின்ற ஜூலை மாதம் 03-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… வரலாற்று சிறப்புமிக்க வெற்றி… போஸ்டர் வெளியிட்டு கொண்டாடும் கருப்பு படக்குழு

கட்டா குஸ்தி 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Sigma: ஜேசன் சஞ்சய் இணைந்து நடனமாடும் சிக்மா பட முதல் பாடல்.. ரிலீஸ் எப்போது?

Follow Us