AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கட்டா குஸ்தி 2 படத்தின் டப்பிங்கை முடித்த விஷ்ணு விஷால் – வைரலாகும் வீடியோ

Gatta Kusthi 2 Movie Update | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக அடுத்தடுத்தப் படங்கள் வரிசையாக காத்திருக்கும் நிலையில் தற்போது கட்டா குஸ்தி 2 படத்தின் டப்பிங் பணிகளை அவர் முடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கட்டா குஸ்தி 2 படத்தின் டப்பிங்கை முடித்த விஷ்ணு விஷால் – வைரலாகும் வீடியோ
விஷ்னு விஷால்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Jun 2026 11:12 AM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் படங்களில் நடித்து வருகின்றார். இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பான்மையன படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அடிப்படையில் கிரிக்கெட்டரான நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் விஷ்ணு விஷால். இந்தப் படத்தில் கபடி வீரராக நடித்த நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் அவர் கிராமத்து இளைஞனாக நடித்து இருந்த நிலையில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வந்தது. மேலும் தமிழ் சினிமாவில் இவர் நாயகனாக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

தொடர்ந்து படங்களில் நாயகனாக நடிப்பது மற்றும் தயாரிப்பது என பிசியாக வலம் வருகிறார். மேலும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அதன்படி முதலாவதாக தற்போது கட்டா குஸ்தி 2 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

கட்டா குஸ்தி 2 படத்தின் டப்பிங்கை முடித்த விஷ்ணு விஷால்:

அதன்படி நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி உள்ள இந்த கட்டா குஸ்தி 2 படம் வருகின்ற ஜூலை மாதம் 3-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் விஷ்ணு விஷால் முடித்து உள்ளார். மேலும் அந்த வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… சூர்யா சார் அதைச் செய்ய நான்தான் வற்புறுத்தினேன் – கருப்பு படத்தின் வைரல் டயலாக் குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி

கட்டா குஸ்தி 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இணையத்தில் வைரலாகும் கான் சிட்டி படத்திலிருந்து வெளியான ஃப்ராடு பயலே பாடல்

Follow Us