AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gatta Kusthi 2: கணவன் மனைவி ஃபைட்.. மேக்கிங் வீடியோவை பகிர்ந்த கட்டா குஸ்தி 2 படக்குழு!

Gatta Kusthi 2 Movie Making Video: விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் கட்டா குஸ்தி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, உருவாகியுள்ள புதிய படம் கட்டா குஸ்தி 2. இப்படமானது வெளியீட்டிற்கு பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Gatta Kusthi 2: கணவன் மனைவி ஃபைட்.. மேக்கிங் வீடியோவை பகிர்ந்த கட்டா குஸ்தி 2 படக்குழு!
கட்டா குஸ்தி 2 படத்தின் மேக்கிங் வீடியோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 30 May 2026 17:34 PM IST

கோலிவுட் மக்கள் மத்தியில் நடிகர் மற்றும் தயாரிப்பாளாராக பிரபலமானவர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal). இவர் தொடர்ந்து ஹீரோவாக படங்களிலும் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான படம் ஆர்யன் (Aryan). அதிரடி திரில்லர் மற்றும் கிரைம் கதைக்களத்தில் வெளியாகியிருந்த இருபடமானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து புதிய திரைப்படங்களில் விஷ்ணு விஷால் பிசியாக இருந்துவருகிறார். இந்நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இவர் நடித்துவந்த திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2 (Gatta Kushi 2). இதை இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கியுள்ள நிலையில், விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி (Aishwarya Lekshmi) இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் 2023ம் ஆண்டில் வெளியான கட்டா குஸ்தி 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2026 ஏப்ரல் இறுதியில் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: என்னுடைய நடிப்பில் சிறந்த படைப்பாக வேட்டுவம் படத்தை பார்க்கிறேன் – நடிகை ஷோபிதா துலிபாலா

கட்டா குஸ்தி 2 படத்தின் மேக்கிங் வீடியோவை பகிர்ந்த படக்குழு:

கட்டா குஸ்தி 2 படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த கட்டா குஸ்தி 2 படமானது, 2023ம் ஆண்டில் வெளியான கட்டா குஸ்தி 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி இருவரும் கணவன் மனைவியாக நடித்துள்ளனர். மேலும் இதில் கருணாஸ், கருணாகரன், முனீஸ்காந்த், காளி வெங்கட், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் மோக்ஷ உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது முழுக்க கணவன் மனைவி இடையே நடக்கும் சண்டை மற்றும் குடும்பத்திற்குள் நடக்கும் கலகலப்பு தொடர்பான கதைக்களத்தில் தயாராகியுள்ளது.

இதையும் படிங்க: டியூட் பட இயக்குநரின் இயக்கத்தில் சிலம்பரசன்.. போட்டிபோடும் தயாரிப்பு நிறுவனங்கள்!

இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. அந்த வகையில் இப்படமானது 2026ம் ஆண்டு ஜூலை 03ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதன் ட்ரெய்லர் 2026 ஜூன் இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் பாடல்கள் தொடர்பான அப்டேட்டுகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us