டியூட் பட இயக்குநரின் இயக்கத்தில் சிலம்பரசன்.. போட்டிபோடும் தயாரிப்பு நிறுவனங்கள்!
Silambarasan And Keerthiswaran: நடிகராக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிலம்பரசன். இவர் வெற்றிமாறனின் இயக்கத்தில் அரசன் படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இதையடுத்து இவர், டியூட் பட இயக்குநரின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தயாரிப்பு நிறுவனங்களுக்கு போட்டி நிலவுவதாக தகவல்.
சினிமாவில் தனது சிறுவயது முதல் தற்போதுவரையிலும் மக்கள் மத்தியில் நெருக்கமான ஒருவராக இருந்துவருபவர் சிலம்பரசன் (Silambarasan). இவரின் நடிப்பில் தொடர்ந்து தமிழ் மொழியில் படங்கள் வெளியாகிறது. இறுதியாக மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் இவர் தக் லைஃப் (Thug Life) என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை இவருக்கு கொடுக்கவில்லை. இப்படத்திற்கு பின், இவர் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் புது படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பிறகு சில காரணங்களால் இப்படம் ஒத்திப்போன நிலையில், தற்போது வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில் அரசன் (Arasan) என்ற படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இந்த படமானது வட சென்னை பட பின்னணி கதைக்களத்தியில் தயாராகிவருகிறது.
இப்படமானது 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. இப்படத்தை அடுத்ததாக சிலம்பரசன், டியூட் (Dude) பட இயக்குநர் கீர்த்திஸ்வரனின் (Keerthiswaran) இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம். தற்போது இப்படத்தை எந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது என போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: சூர்யா சார் கருப்பு படத்தை பார்க்கவே இல்லை – பகிர் விஷயத்தை சொன்ன ஆர்.ஜே.பாலாஜி
சிலம்பரசன் – கீர்த்திஸ்வரனின் கூட்டணி படத்தின் தயாரிப்பு நிறுவனம் :
சிலம்பரசன் மற்றும் கீர்த்திஸ்வரனின் கூட்டணி படத்தை, டியூட் படத்தை தயாரித்திருந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக ஆரம்பத்தில் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவந்தது. ஆனால் சித்தாரா என்டேர்டைமென்ஸ் மற்றும் ஏஜிஎஸ் என்டேர்டைமென்ஸ் என தற்போது இந்த நிறுவனங்களும் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.
இதையும் படிங்க: குஷ்புவின் மகளுக்கு திருமணம் – குடும்பத்துடன் பிரதமருக்கு அழைப்பு – மாப்பிள்ளை இவரா?
சிலம்பரசன், அரசன் படத்தை முடித்த கையேடு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR51 படத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அஸ்வத் தற்போது சூப்பர் ஸ்டாரின் 173வது படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக சிலம்பரசன் டியூட் பட இயக்குநர் கீர்த்திஸ்வரனின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறாராம். இதை எந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் என்பது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலம்பரசன் மற்றும் கீர்த்திஸ்வரன் கூட்டணி படம் குறித்த எக்ஸ் பதிவு:
#SilambarasanTR is set to star in his next film directed by #Keerthiswaran. Reports suggest that three major production houses have shown interest in backing the project.
Initially, the film was expected to be produced by #MythriMovieMakers. However, discussions are now underway… pic.twitter.com/egKTsdFBhd
— Movie Tamil (@_MovieTamil) May 30, 2026
இன்னும் இந்த கூட்டணி படமானது நடக்குமா என உறுதியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் சிலம்பரசன் அடுத்ததாக இயக்குநர் அஸ்வத் இயக்கத்தில் புது படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.