AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசன் படத்தில் சிம்புவின் ஜோடி அந்த நடிகையா? இணையத்தில் வைரலாகும் அப்டேட்

Arasan Movie Actress Yogalakshmi Speech Viral On Social Media | தமிழ் சினிமாவில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் அரசன். இந்தப் படத்தில் யார் நாயகி என்று பல கேள்விகள் எழுந்து வந்த நிலையில் தற்போது தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.

அரசன் படத்தில் சிம்புவின் ஜோடி அந்த நடிகையா? இணையத்தில் வைரலாகும் அப்டேட்
அரசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 May 2026 11:00 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படத்தினை இயக்குநர் வெற்றிமாறன் எழுதி இயக்கி வருகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் போல இந்த அரசன் படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் முன்னதாக வெளியாகி மாபெரும் வரவேற்ப்பைப் பெற்ற வட சென்னை படத்தின் கதாப்பாத்திரங்களும் இணைந்து நடிப்பதால் அந்தப் படத்திற்கும் அரசன் படத்திற்கும் ஒரு கனெக்‌ஷன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அரசன் படத்தில் வட சென்னை படத்தின் நாயகன் தனுஷ் நடிப்பாரா இல்லையா? அவரது கதாப்பாத்திரம் வருமா இல்லையா என்று ஒரு பக்கம் கேள்விகள் இருந்து வருகின்றது. அதே போல அரசன் படத்தில் நாயகன் மற்ற கதாப்பாத்திரங்கள் வெளியாகி வரும் நிலையில் இதுவரை நாயகி யார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இதன் காரணமாக சினிமா வட்டாரங்களில் தொடர்ந்து நாயகி தொடர்பான அப்டேட்கள் வைரலாகி வந்தது. முன்னதாக பிரியங்கா மோகன் மற்றும் சமந்தா ஆகியோர் பெயர்கள் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளனர் என்று தகவல்கள் வைரலாகி வந்தது. இந்த நிலையில் தற்போது முற்றிலும் புதிதான ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரசன் படத்தில் சிம்புவின் ஜோடி அந்த நடிகையா?

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை யோகலட்சுமி. இவர் முன்னதாக ஹார்ஸ்டார் ஓடிடியில் ஹார்ட் பீட் என்ற இணையதள தொடரில் நடித்து பிரலமாகி இருந்தார். இந்த நிலையில் அரசன் படத்தில் பூஜை தொடங்கி அடுத்தடுத்து வெளியான புகைப்படங்களில் நடிகை யோக லட்சுமி இருப்பது இணையத்தில் வெளியாகி வைராலி வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை யோகலட்சுமி தான் தான் அரசன் படத்தில் நடிகர் சிம்புவிற்கு நாயகியாக நடிப்பதாக தெரிவித்துள்ளார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… சூர்யா சார் ஒரு சிறந்த மனிதர் – நடிகர் நஸ்லேன் புகழாரம்

இணையத்தில் வைரலாகும் நடிகை யோகலட்சுமி பேச்சு:

Also Read… சர்வம் மாயா படத்தில் டெலுலுவாக நான் தான் நடிக்க வேண்டியது – நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஓபன் டாக்

Follow Us