Sivakarthikeyan: சேயோன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் இணையும் இயக்குநர் இவரா? – வைரலாகும் தகவல்!
Sivakarthikeyan Next Director: தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்துவரும் நாயகனாக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது சிவகுமார் முருகேசனின் இயக்கத்தில் சேயோன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை முடித்தவுடன் எந்த இயக்குநருடன் இவர் இணையவுள்ளார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது பற்றி விவரமாக பார்க்கலாம்.
நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) சின்னத்திரையிலிருந்து சினிமாவில் நாயகனாக முன்னேறியவர். இவரின் நடிப்பில் இதுவரை மொத்தம் 24 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து தற்போது தாய் கிழவி (Thaai Kizhavi) படத்தை இயக்கியிருந்த சிவகுமார் முருகேசனின் (Sivakumar Murugesan) இயக்கத்தில், சேயோன் (Seyon) என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் (Kamal haasan) ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசடையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2026 மே 18ம் தேதியோடு மதுரையில் தொடங்கியிருந்தது. கிட்டத்தட்ட 21 நாட்களுக்கும் மேல் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஷூட்டிங்கில் ஈடுபடுகிறார் என கூறப்படுகிறது.
இப்படமானது விருமாண்டி மற்றும் முருகனின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவருகிறதாம். அந்த வகையில் இப்படத்தை அடுத்ததாக சிவகார்த்திகேயன் எந்த இயக்குநருடன் இணைகிறார் என என எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: டோக்கியோவில் இந்திய நடிகை.. சர்வதேச மேடையில் ராஷ்மிகாவிற்கு கிடைத்த அங்கீகாரம்!
சேயோன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இணையும் இயக்குநர்:
சிவகார்த்திகேயன் சேயோன் படத்தை தொடர்ந்து, வெங்கட் பிரபுவுடன் இணைகிறாரா?, மீண்டும் சிவகுமாரின் இயக்கத்தில் நடிக்கிறாரா? அல்லது சிபி சக்கரவர்த்தியின் படத்தில் நடிக்கிறாரா? என ரசிகர்கள் மத்தியில் குழப்பங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் சிவகார்திகேயன், பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க தயாராகியுள்ளாராம், இப்படத்தின் கதை ஏற்கனவே சிலம்பரசனுக்கு சொல்லப்பட்ட STR49 பட கதையாம்.
இதையும் படிங்க: சூர்யா சார் இந்தப் பிரம்மாண்ட வெற்றியின் ஒவ்வொரு துளிக்கும் நீங்கள் முழுமையாகத் தகுதியானவர் – இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்
மேலும் சிபி சக்கரவர்த்தியும் தலைவர் 173 படத்தை கைவிட்டதையடுத்து, சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ளார் என கூறப்படுகிறது. அந்த வகையில் யார் உண்மையில் சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ளார் என்பது குறித்த எந்த அறிவிப்புகளும் இல்லை. விரைவில் இதுபற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் சிவகார்த்திகேயன் இணையும் படம் பற்றிய பதிவு:
#Sivakarthikeyan is currently acting in the film #Seyon. After completing this project, he is set to star in a new film directed by #RamkumarBalakrishnan, who previously directed the movie Parking. The film will be produced by Sathya Jyothi Films. pic.twitter.com/AfFKz71mVd
— Movie Tamil (@_MovieTamil) May 24, 2026
சிவகார்த்திகேயன் தற்போது சேயோன் பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் நிலையில், இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் 3 மாதங்களுக்கு மேல் நடைபெறும் என கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கும் நிலையில், சிவகார்த்திகேயனுக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த் சேயோன் படத்தை 2026ம் ஆண்டு ஆயுத பூஜையுடன் படக்குழு வெளியிட திட்டமிட்ட நிலையில், தற்போதுதான் ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில், 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையோடு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.