அந்த நேரத்தில் சிவா ரொம்பவே கஷ்டப்பட்டாரு.. இப்போது அவரை நினைத்தால் பெருமையாக இருக்கு – சந்தோஷ் நாராயணன்!
Santhosh Narayanan About Sivakarthikeyan : தென்னிந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக ஹிட் பாடல்களை கொடுத்துவருபவர் சந்தோஷ் நாராயணன். இவர் சிவகார்த்திகேயனின் சேயோன் என்ற படத்தில் தற்போது இசையமைப்பாளராக பணியாற்றிவரும் நிலையில், அப்படம் மற்றும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி குறித்து பெருமையாக பேசியுள்ளார்.
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பாளராக பிரபலமானவர் சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan). இவரின் இசையில், தனுஷ் (Dhanush) முதல் சூர்யா (Suriya) போன்ற பல்வேறு நடிகர்களின் படங்களின் பாடல்கள் வெளியாகியிருக்கிறது. அதிலும் இவர், கடந்த 2025ம் ஆண்டு வெளியான ரெட்ரோ (Retro) படத்தில் இசையமைத்திருந்த நிலையில், அப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில் இவர் தெலுங்கிலும் பிரம்மாண்டமான திரைப்படங்களில் பணியாற்றிவருகிறார். குறிப்பாக கல்கி 2 (Kalki 2) என்ற படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் (Sivakarthieyan) சேயோன் (Seyon) படத்திற்கும் இவரே இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார்.
சிவகார்த்திகேயன் மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில், இதுவரையிலும் எந்த படத்திலும் ஒன்றாக இணைந்து பணியாற்றியதில்லை. முதல் முதலாக இவர்களின் கூட்டணி இணைந்துள்ள படம்தான் சேயோன். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த சந்தோஷ் நாராயணன், சிவகார்த்திகேயன் மற்றும் சேயோன் படத்தில் பணியாற்றுவது பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: ஒரு முழுமையான மாஸ் கமர்ஷியல் பிளாக்பஸ்ட்.. கருப்பு படத்தை பாராட்டிய இயக்குநர் அட்லீ!
சிவகார்த்திகேயன் மற்றும் சேயோன் திரைப்படம் குறித்து வெளிப்படையாக பேசிய சந்தோஷ் நாராயணன்:
அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசியிருந்த சந்தோஷ் நாராயணன், “சினிமாவில் ஆரம்ப நேரத்தில் சிவகார்த்திகேயன் ரொம்பவே கஷ்டப்பட்டாரு. தொலைக்காட்சியிலிருந்து சினிமாவிற்கு வரவே முடியாது. டிவியிலிருந்து மற்றொரு டிவிக்கே செல்ல முடியாது. தொலைக்காட்ச்சியில் ஒருவராக இருந்தீர்கள் என்றால், சினிமாவில் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதுபோன்ற நிலை இருந்தது. அதையெல்லாம் உடைத்தெறிந்து தற்போது சினிமாவில் இருக்கிறார். நானும் அவரும் கல்லூரி காலகட்டத்தில் நிறைய கஷ்டங்களை சந்தித்திருக்கிறோம். சினிமாவிலும் அப்படியே வந்துவிட்டோம். எங்களுக்கு எப்போதுமே வெளிப்படையாக பேசித்தான் பழக்கம். சிவகார்த்திகேயனும் அப்படிப்பட்ட நபர்தான்.
இதையும் படிங்க: சிரஞ்சீவி படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகை அனஸ்வரா ராஜான் – வைரலாகும் வீடியோ
தற்போது அவர் சினிமாவில் பெரிய நடிகராக இருக்கிறார். அவரை சிவா என கூறலாமா?, இல்லை சிவா சார் என சொல்லணுமான்னு தெரியல. அவரை நினைத்து ரொம்பவே பெருமையாக இருக்கிறது. அவருடன் சேயோன் படத்தில் பணியாற்றிவருகிறேன். இந்த படத்தில் பணிபுரிவதை எனது வேலையாகவே பார்க்கவில்லை, எனக்கு தெரிந்த மற்றும் என்னால் முடிந்த சிறப்பை இப்படத்திற்காக நான் கொடுக்கிறேன் என சொல்லிருக்கேன். சேயோன் படம் நிச்சயமாக உங்களுக்கு சிறப்பான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என நம்புகிறேன்” என அவர் கூறியிருந்தார்.
சேயோன் படம் குறித்து சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
So very excited for this special special one 🥁🥁🔥🔥🔥 https://t.co/vGsDPudiwu
— Santhosh Narayanan (@Music_Santhosh) May 20, 2026
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் சேயோன். இதில் கமல்ஹாசன் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவருகிறார். அந்த வகையில், தற்போது இப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது.