AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மதுரையில் பிரம்மாண்டமாக தொடங்கிய சேயோன் பட ஷூட்டிங்.. வெளியானது படப்பிடிப்பு பூஜை வீடியோ!

Seyon Shooting Pooja Video: சிவகார்த்திகேயன் மற்றும் சிவகுமார் முருகேசனின் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் சேயோன். இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்துவரும் நிலையில், 2026 மே 18ம் தேதியில் இப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் பூஜையுடன் தொடங்கியிருந்தது. அந்த வகையில் இப்பட ஷூட்டிங் பூஜையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

மதுரையில் பிரம்மாண்டமாக தொடங்கிய சேயோன் பட ஷூட்டிங்.. வெளியானது படப்பிடிப்பு பூஜை வீடியோ!
சேயோன் பட ஷூட்டிங் பூஜை வீடியோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 20 May 2026 14:54 PM IST

சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) 26வது திரைப்படமாக தமிழில் உருவாகிவருவதுதான் சேயோன் திரைப்படம் (Seyon). இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) நடித்துவருகிறார். இதுதான் இவர் முதல் முதலாக நடிக்கும் நேரடி தமிழ் திரைப்படமாகும். இதற்க்கு முன் காந்தா படத்தில் (Kaantha) துல்கர் சல்மானுக்கு (Dulquer Salmaan) ஜோடியாக நடித்து தனது திறமையை வெளிகாட்டியிருந்தார். இந்த சேயோன் படத்தை தாய் கிழவி திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருந்த இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கிவருகிறார். மேலும் இப்படத்தை கமல்ஹாசனின் (Kamal Haasan) ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் (Santhosh Nayaranan) இசையமைத்துவருகிறார். சிவகார்த்திகேயனின் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பது இதுவே முதல் முறையாகும்.

அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2026ம் ஆண்டு மே 18ம் தேதியில் மதுரையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. இதில் சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் மற்றும் படக்குழுவினரும் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் பூஜை தெடர்பான் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ஆவணப்படம் கிளாடியேட்டர்ஸ் ரிலீஸ் எப்போது தெரியுமா?

சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் ஷூட்டிங் பூஜை தொடர்பாக படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த சேயோன் படமானது விருமாண்டி சாமி மற்றும் முருகன் இருவருக்கும் இடையே நடந்த கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ, 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருந்தது. இதில் சிவகார்த்திகேயன் மற்றும் பாலா சரவணன் இருவருமே இடம்பெற்றிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதையும் படிங்க: ரியல் முதல்வரை சந்தித்த ரீல் முதல்வன்.. முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் அர்ஜுன் சர்ஜா!

மதுரையில் இப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 21 நாட்கள் தொடர்ந்து சிவகார்த்திகேயன் முதற்கட்ட ஷூட்டிங்கை முடிப்பார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் முதற்கட்ட ஷூட்டிங்கிற்கு 4 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் இருவருமே மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர்.. இப்படமானது ஆக்ஷன், காமெடி மற்றும் ஒரு கிராமத்து கதைக்களம் கொண்ட பக்தி படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 2027ம் ஆண்டு பொங்கலுக்கு இப்படத்தை வெளியிடப் படக்குழு முடிவுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us