Arjun Sarja: ரியல் முதல்வரை சந்தித்த ரீல் முதல்வன்.. முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் அர்ஜுன் சர்ஜா!
Arjun Sarja Met CM Vijay: தென்னிந்திய சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ஜுன். இவர் சமீபத்தில் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்துள்ளார். இந்நிலையில் அவருடன் எடுத்திருந்த புகைப்படங்களை பகிர்ந்து அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட் சினிமாவில் பிரபல கதாநாயகனாகவும், இயக்குநராகவும் படங்களில் பணியாற்றிவருபவர் அர்ஜுன் சர்ஜா (Arjun Sarja). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கி போன்ற மொழிகளில் தொடர்ந்து பெரிய திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவர் தமிழில் நடித்துள்ள புதிய திரைப்படம்தான் பிளாஸ்ட் (Blast). இப்படத்தை அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் (Subhas K Raj) இயக்கியுள்ள நிலையில், ஏஜிஎஸ் எண்டெர்டெயிமென்ட் நிறுவனமானது தயாரித்துள்ளது. இப்படத்தில் அர்ஜுன், அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2026 மே 28ம் தேதியில் வெளியாகிறது. அந்த வகையில் இப்படத்தின் நிகழ்ச்சியின்போது, தமிழக முதல்வர் விஜய்க்கு (CM Vijay) வாழ்த்து தெரிவித்து அர்ஜுன் பேசியிருந்தார்.
அதை தொடர்ந்து, சமீபத்தில் நேரில் சந்தித்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அர்ஜுன். அந்த வகையில், முதல்வர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அவருக்கு வாழ்த்து பதிவை நடிகர் அர்ஜுன் சர்ஜா வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் முதல்வர் விஜயை வாழ்த்தும் விதத்தில் எழுதி பகிர்ந்துள்ளார். தற்போது இப்பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் தனுஷுடன் பணியாற்றிய அனுபவம் – சாண்டி மாஸ்டர் பகிர்ந்த விஷயம்!
முதல்வர் விஜயை நேரில் சந்தித்து குறித்து நடிகர் அர்ஜுன் சர்ஜா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
அந்த பதிவில் நடிகர் அர்ஜுன், “எங்கள் அன்புக்குரிய முதல்வன், சி.ஜோசப் விஜய். பெரும் பொறுப்பை கண்ணியத்துடன் தொடர்ந்து ஏற்கும் அவருக்கு வலிமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் வழிகாட்டுதல் கிடைக்க வாழ்த்துகிறோம்” என அதில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தற்போது இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ஜூனியர் என்டிஆர்-யின் பர்த்டே.. டிராகன் பட கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
தமிழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் மற்றும் தளபதி விஜய் இருவரும் லியோ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய்யின் சித்தப்பா “ஹரோல்ட் தாஸ்” என்ற வேடத்தில் நடித்திருந்தார். இப்படமானது இவர்களுக்கு சிறப்பான மற்றும் வெற்றி அமைந்திருந்தது. அந்த வகையில் தமிழக ம்முதல்வராக விஜய் பதிவியேற்ற நிலையில், நடிகர் அர்ஜுன் நடித்திருந்த முதல்வன் படத்தின் காட்சிகளை பகிர்ந்து பலரும் இணையத்தில் பரப்பிவந்தனர். இந்நிலையில் ரீல் முதல்வன் அர்ஜுன், ரியல் முதல்வர் தளபதி விஜயை சந்தித்திருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் வைரலாகுவருகிறது.