AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sandy Master: ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் தனுஷுடன் பணியாற்றிய அனுபவம் – சாண்டி மாஸ்டர் பகிர்ந்த விஷயம்!

Sandy Master Experiences with Rajini, Kamal, Dhanush: தமிழ் சினிமாவில் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகராக இருந்துவருபவர் சாண்டி மாஸ்டர். இவர் பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் படங்களில் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் தனுஷுடன் பணியாற்றியிருந்த அனுபவம் குறித்து அவர் பேசியுள்ளார்.

Sandy Master: ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் தனுஷுடன் பணியாற்றிய அனுபவம் – சாண்டி மாஸ்டர் பகிர்ந்த விஷயம்!
கமல்ஹாசன், சாண்டி, ரஜினிகாந்த் மற்றும் தனுஷ்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 19 May 2026 18:47 PM IST

சின்னத்திரையிலிருந்து சினிமா மூலம் வெள்ளித்திரையிலும் பிரபலமானவர் சாண்டி மாஸ்டர் (Sandy Master). இவர் சினிமாவில் ஆரம்பகட்டத்தில் நடன இயக்குநராக பணியாற்றிவந்த நிலையில், தற்போது படங்களில் வில்லன் மற்றும் முக்கியமான வேடங்களில் நடித்துவருகிறார். தமிழ் சினிமாவில் லியோ படத்தில் (Leo Movie) சாக்லேட் காஃபி என்ற காட்சியின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் வெகுவான பிரபலம் கிடைத்தது. இந்த பிரபலத்தை தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களிலும் முக்கிய வில்லனாக படங்களில் பணியாற்றிவருகிறார். இவர் மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷனின் (Kalyani Priyadarshan) நடிப்பில் வெளியான லோகா (Lokah) என்ற படத்தில், அதிரடி வில்லனாக நடித்து மலையாளத்திலும் வெகுவான வரவேற்பை பெற்றிருந்தார்.

இவர் நடன இயக்குநராக பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் பணியாற்றியிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சாண்டி மாஸ்டர், தனுஷ் (Dhanush), ரஜினிகாந்த் (Rajinikanth) மற்றும் கமல்ஹாசனுடன் (Kamal Haasan) பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: டிமாண்டி காலனி 3 தீவிர திகில் திரைப்படமாக இருக்கும் – அப்டேட் கொடுத்த இயக்குநர் அஜய் ஞானமுத்து!

ரஜினி, கமல் மற்றும் தனுஷுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சாண்டி மாஸ்டர் பகிர்ந்த விஷயம்:

அந்த நேர்காணலில் அவர் பேசும்போது, “நட்சத்திரங்களுடன் பணிபுரியும்போது எனக்கு எப்போதுமே சில ஆசைகள் உண்டு. சமீபத்தில், நாங்கள் தனுஷ் சாருடன் ஒரு பாடல் செய்தோம். அவரை முழுமையாக நடனமாட வைக்க விரும்பினேன், அந்த ஆசையை வெற்றிகரமாக நிறைவேற்றினேன். மேலும் நான் ரஜினிகாந்த் சாருடன் பணிபுரிந்தபோது, ​​’சிக்கிட்டு’ பாடலில் வரும் அந்த ஃப்ளோர் மோஷனை அவரால் செய்ய முடியுமா? என்று எனக்கு ஒரு சிறிய சந்தேகம் இருந்தது. ஆனால் நான் அவரிடம் கேட்கச் சென்றபோது, ​​அவர் தூங்கிக் கொண்டிருந்தார். நான் அவரை எழுப்பி அந்த யோசனையை விளக்கினேன். உடனடியாக, அவர், “ஆ… என்ன பண்ணனும், என்ன பண்ணனும்..” என்று சொல்லி அதைச் செய்தார்.

இதையும் படிங்க: காயப்படுத்தும் எண்ணம் சிறிதும் இல்லை.. இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட கருப்பு படக்குழு!

அதைப்போல கமல் சார் ஏற்கெனவே ‘சிங்கரி சரக்கு’ போன்ற பல உள்ளூர் பாடல்களைச் செய்திருந்தார். நானும் அவருடன் அதுபோல ஒரு பாடலைச் செய்ய விரும்பினேன். ‘பத்தல பத்தல ‘ பாடலின் பாதி எடிட் செய்யப்பட்டது. அது இருந்தால் இன்னும் பயங்கரமா இருக்கும்” என அதில் சாண்டி மாஸ்டர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, தனுஷ் மற்றும் கமல்ஹாசன் குறித்து சாண்டி மாஸ்டர் சொன்ன விஹஸ்யம் தொடர்பான பதிவு:

சாண்டி மாஸ்டர் தற்போது சினிமாவில் நடிப்பில் பயங்கரமாக கவனம் செலுத்திவருகிறார். இவர் தற்போது நடிகர் கவினின் நடிப்பில் உருவாகிவரும் 9வது படத்தில் அவருடன் மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்துவருகிறார். இதை இயக்குநர் கென் ராய் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us