AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

குஜிலி மஸ்து… பாசில் ஜோசப் – அக்ஷய் குமாரின் ராவடி படத்தின் செகண்ட் சிங்கிள்!

Gujili Masthu Song: மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் பாசில் ஜோசப். இவர் மற்றும் சிறை பட நடிகர் அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம்தான் ராவடி. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள நிலையில், தற்போது இப்படத்தின் 2வது பாடலான குஜிலி மஸ்து என்ற பாடல் வெளியாகியுள்ளது.

குஜிலி மஸ்து… பாசில் ஜோசப் – அக்ஷய் குமாரின் ராவடி படத்தின் செகண்ட் சிங்கிள்!
குஜிலி மஸ்து வீடியோ பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Nov 2026 19:35 PM IST

தமிழ் சினிமாவில் சிறை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் எல்.கே.அக்ஷய் குமார் (LK Akshay Kumar). இவர் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான சிறை (Sirai Movie) படத்தில் அப்துல் என்ற வேடத்தில் நடித்து சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, இவர் 2வது ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம்தான் ராவடி (Raawadi Movie). இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் வடிவேல் (Director Vignesh Vadivel) இயக்கிவருகிறார். இந்த ராவடி படத்தில் மலையாள நடிகர் பாஸில் ஜோசப் மற்றும் அக்ஷய் குமார் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமானது தயாரித்துள்ள நிலையில், பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் (Jen Martin) இசையமைத்துள்ள நிலையில், ஏற்கனவே முதல் சிங்கிள் வெளியாகியிருந்தது. இதன் பிறகு தற்போது குஜிலி மஸ்து (Gujili Masthu Song) என்ற 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஸாம்பீ பராக்… சந்தானத்தின் லவ் பைட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அக்ஷய் குமாரின் ராவடி திரைப்படத்தின் குஜிலிமஸ்து பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த குஜிலிமஸ்து பாடலை ஜென் மார்ட்டின் இசையமைக்க, அந்தோணி தாசன் மற்றும் ஜென் மார்ட்டின் இணைந்து பாடியுள்ளனர். மேலும் இபபடலின் வரிகளை செம்வி மற்றும் ராம் பிரஷாந்த் இணைந்து எழுதியுள்ளனர். தற்போது இந்த குஜிலிமஸ்து என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

ராவடி திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது;

இந்த ராவடி திரைப்படத்தில் பாசில் ஜோசப், எல்கே.அக்ஷய் குமார், ஜாக்கி சாதிக் மற்றும் பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை தனது தந்தை எஸ்.எஸ்.லலித்குமாரின் தயாரிப்பின் கீழ் அக்ஷய் குமார் நடித்துள்ளார். இப்படமானது முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்கும் கதைக்களத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: லக்ஷ்மி பிரியா – தன்யா பிரச்சனை.. லக்ஷ்மி பிரியாவை கேள்விகளால் பெண்டு நிமித்திய விஜய் சேதுபதி!

அதிரடி ஆக்ஷன், காமெடி போன்ற கதைக்களத்தில் இந்த படமானது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது. இந்த படமானது 2026 கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us