மாநில உரிமைகளை தவெக எரித்து சாம்பலாக்கியது…. – கனிமொழி விமர்சனம்
Thiruparankundram Deepam Row : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி நவம்பர் 28, 2026 இன்று மாலை சரியாக மாலை 5 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, மாநில உரிமைகளை தவெக எரித்து சாம்பலாக்கியிருப்பதாக விமர்சித்துள்ளார்.
சென்னை, நவம்பர் 28 : உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதிகள் முன்னிலையில் திருப்பரங்குன்றம் (Thiruparankundram) மலையில் உள்ள தீபத்தூணில் நவம்பர் 28, 2026 இன்று மாலை 5 மணிக்குத் ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, மாநில உரிமைகளை தவெக எரித்து சாம்பலாக்கியிருப்பதாக விமர்சித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் ஏற்றப்பட்ட தீபம்
கடந்த நவம்பர் 24, 2026 கார்த்திகை தீபத் திருநாளன்று மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கம் போல உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.




இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நவம்பர் 28,2026 இன்று தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டதுடன், திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் மத்திய பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவும் உத்தரவிட்டனர். தீபம் ஏற்றுவதை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோரை நிர்வாகப் பொறுப்பாளர்களாக நியமித்தனர்.
இந்த நிலையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி நவம்பர் 28, 2026 இன்று மாலை சரியாக மாலை 5 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றப்பட்டபோது பக்தர்கள் எழுப்பிய வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை முட்டியது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து, மலையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கனிமொழி விமர்சனம்
பேரறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் திராவிட இயக்கம் தொடர்ந்து காத்து வந்த மாநில உரிமைகளை, இன்று எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறது தவெக அரசு.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 28, 2026
இந்த நிலையில் இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், பேரறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் திராவிட இயக்கம் தொடர்ந்து காத்து வந்த மாநில உரிமைகளை, இன்று எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறது தவெக அரசு என விமர்சித்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பதிவில், மத நம்பிக்கைகளையும் வழிபாட்டு உரிமைகளையும் மதித்துப் போற்றுவதோடு, பல்வேறு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், தமிழ்நாட்டில் நிலவி வரும் அமைதியான சமூகச் சூழலையும் பாதுகாப்பது அனைவரின் தலையாய பொறுப்பாகும்.
இதையும் படிக்க : தொகுதி மறுவரையறை ஆதரவு.. “தீராப்பழி ஏற்படும்”.. திமுக முடிவை மறுபரிசீலனை செய்ய கி.வீரமணி வேண்டுகோள்!!
இத்தகைய சூழலில், கோவில் நிர்வாகம் தொடர்பாக நீதிமன்றம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்திருப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மத்திய துணை ராணுவப் படைகளின் பங்களிப்பு ஆகியவை நீதித்துறை, மாநில நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் அதிகார வரம்புகள் குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. உணர்வுப்பூர்வமான இதுபோன்ற விவகாரங்களில், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நிர்வாகப் பொறுப்புகளும், இந்திய அரசியல் சாசனம் வகுத்துக்கொடுத்துள்ள கூட்டாட்சிக் கட்டமைப்பும் உரிய முறையில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.