IND vs NZ: WTCல் அதிகமுறை டக் அவுட்.. விராட் கோலியை முந்திய ஜெய்ஸ்வால்..!
Yashasvi Jaiswal Unwanted Record: கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த டெஸ்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக முறை (8) டக் அவுட் ஆன வீரர் என்ற விரும்பத்தகாத சாதனையைப் படைத்தார். இதன் மூலம், விராட் கோலியின் (7) சாதனையை அவர் முறியடித்தார். இந்திய-நியூசிலாந்து போட்டிச் சுருக்கமும், டக் அவுட் ஆன இந்திய வீரர்களின் பட்டியலும் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) ஒரு விரும்பத்தகாத சாதனையைத் தன் பெயரில் சேர்த்துள்ளார். கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இரண்டாவது இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் (IND vs NZ 2nd Test), யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆனவர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் தற்போது தன்வசம் கொண்டுள்ளார். இந்த மோசமான சாதனையில் ஜெய்ஸ்வால் விராட் கோலியை முறியடித்துள்ளார்.
ALSO READ: நாதன் லயன் டெஸ்ட் போட்டியில் நீக்கம்.. 15 ஆண்டு தொடர் சாதனை முறிவு..!




நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் எடுத்தது. இந்தியா பேட்டிங் செய்ய வந்தபோது, இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே மேட் ஹென்றி பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் க்ளீன் போல்ட் ஆனார். அதன்படி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழப்பது இது எட்டாவது முறையாகும்.
அதிக முறை 0 ரன்களில் ஆட்டமிழப்பு:
🚨🚨UNPLAYABLE DELIVERY BY MATT HENRY TO JAISWAL WAS DISMISSED FOR A GOLDEN DUCk.🚨🚨
Matt Henry was on 🔥 🔥 with both batting and bowling
Yashasvi Jaiswal was shocked to see the movement off the pitch. When Jaiswal doesn’t score India batting will collapse in recent matches.
India is trailing by 240 runs in the first innings.
— Rab (@Rashmikafanclu) November 28, 2026
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் (WTC) விராட் கோலி 46 போட்டிகளில் 7 முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். அதேநேரத்தில், ஜெய்ஸ்வால் வெறும் 33 போட்டிகளில் 8 முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 6 முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த இந்திய வீரர்களின் பட்டியலில் சேதேஷ்வர் புஜாராவும் இடம்பெற்றுள்ளார்.
WTC-யில் அதிக முறை 0 ரன்களில் ஆட்டமிழந்த இந்திய பேட்ஸ்மேன்கள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில், ‘0’ ரன்களில் அதிக முறை ஆட்டமிழந்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி இரண்டாம் இடத்திலும், சேதேஷ்வர் புஜாரா மூன்றாம் இடத்திலும் உள்ளனர். தற்போதைய இந்திய கேப்டன் சுப்மன் கில்லும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
- 8 முறை – யஷஸ்வி ஜெயஸ்வால்
- 7 முறை – விராட் கோலி
- 6 முறை – சேதேஷ்வர் புஜாரா
- 5 முறை – சுப்மன் கில்
ALSO READ: 33 டெஸ்ட் போட்டிகள்.. வெவ்வேறு ஸ்டேடியத்தில் களம்.. வித்தியாசமான சாதனை படைத்த ஜெய்ஸ்வால்!
போட்டி சுருக்கம்:
நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ் 356 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணிக்காக டாம் பிளண்டெல் 89 ரன்களும், கேப்டன் டாம் லாதம் 59 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். இந்திய அணிக்காக ஆகாஷ் தீப் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பதிலுக்கு ஆடிய இந்திய அணி, 100 ரன்களை எட்டுவதற்குள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், தேவதத் படிக்கல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் விக்கெட்டை இழந்தது. அதேநேரத்தில், 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.