AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: கேப்டன்ஷி அனுபவம்.. SMAT சக்சஸ்.. சஞ்சுவை கேப்டனாக்குங்கள்.. எழும் கோரிக்கை!

CSK Captain Change: சையத் முஷ்டாக் அலி டிராபியில் சஞ்சு சாம்சனின் சிறப்பான தலைமைத்துவம், கேரள அணியை சூப்பர் லீக்கிற்கு இட்டுச் சென்றது. இம்முடிவுகள் சிஎஸ்கே ரசிகர்களிடையே அவரை அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளன. மறுபுறம், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான மகாராஷ்டிரா அணி வெளியேறியதால், அவரது கேப்டன்சி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

IPL 2027: கேப்டன்ஷி அனுபவம்..  SMAT சக்சஸ்.. சஞ்சுவை கேப்டனாக்குங்கள்.. எழும் கோரிக்கை!
ருதுராஜ் கெய்க்வாட் - சஞ்சு சாம்சன்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Nov 2026 09:00 AM IST

சையத் முஷ்டாக் அலி டிராபியில் (Syed Mushtaq Ali Trophy 2026/27) கேரள அணியின் செயல்பாட்டை தொடர்ந்து, சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ்அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சையத் முஷ்டாக் அலி டிராபியில் கேரள அணி சூப்பர் லீக்கிற்குள் நுழைந்துள்ள நிலையில், ரசிகர்கள் சஞ்சு சாம்சனின் (Sanju Samson) கேப்டன்சியைப் பாராட்டுவதோடு, ஐபிஎல் 2027ல் சிஎஸ்கே அணியின் கேப்டன்ஷியிலும் மாற்றம் செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். அதேநேரத்தில், இதே தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு தலைமை தாங்கி வரும் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஷி சிறப்பாக இல்லை என்பதே உண்மை.

ALSO READ: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் இவர்தான்.. வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

சிஎஸ்கே ஏன் சஞ்சுவை கேப்டனாக நியமிக்கவில்லை?

கடந்த ஐபிஎல் 2026 சீசனில் டிரேடிங் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றார் சஞ்சு சாம்சன். இந்த சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சனின் பேட்டிங் சிறப்பானதாகவே இருந்தது. அதேநேரத்தில், ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கும் சிறப்பாக இல்லை, கேப்டன்ஷியும் விமர்சனத்திற்கு உள்ளானது. இருப்பினும், சஞ்சு சாம்சன் முழு மனதாக ஒரு வீரராக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையின் கீழ் விளையாடினார்.

சையத் முஷ்டாக் அலி டிராபியில் கேரள அணி 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 20 புள்ளிகளையும், +2.06 என்ற நல்ல நிகர ரன் விகிதத்த்தையும் கொண்டுள்ளது. சஞ்சுவிடம் கேப்டனாக அனுபவமும், ஆட்டத்தைப் பற்றிய புரிதலும், அழுத்தத்தைச் சமாளிக்கும் திறனும் உள்ளன. சிஎஸ்கே அணி சஞ்சுவை கேப்டனாக்கி, ருதுராஜ் கெய்க்வாடை பேட்டிங்கில் கவனம்செலுத்த அனுமதிக்க வேண்டிய நேரம் இது என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

சஞ்சு சாம்சன் கேரளா அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 154 ரன்கள் எடுத்தார். சஞ்சு இந்தத் தொடரில் தொடக்க ஆட்டக்காரராகவும், அணிக்கு மிடில் ஆர்டர் வரிசை வலுப்பெற வேண்டி மூன்றாவது வரிசை ஆட்டக்காரராகவும் விளையாடினார்.

மகாராஷ்டிரா அணியின் செயல்பாடு:

இதற்கிடையில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமை தாங்கிய மகாராஷ்டிரா அணி, சூப்பர் லீக் தொடருக்குத் தகுதி பெறாமலேயே வெளியேறியது. கெய்க்வாட் அந்தத் தொடரில் சில போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அசாம் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்ததே அவரது சிறந்த ஆட்டமாக இருந்தது. கெய்க்வாட் மத்தியப் பிரதேசத்திற்கு எதிராக 14 ரன்களும், திரிபுராவிற்கு எதிராக 4 ரன்களும் எடுத்தார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்த உடனேயே கெய்க்வாட் அணியில் இணைந்ததால், அவர் பல போட்டிகளில் விளையாடவில்லை.

ALSO READ: 6வது கோப்பைதான் இலக்கு.. ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த ரோஹித் சர்மா!

கெய்க்வாட் தலைமையிலான மகாராஷ்டிரா சூப்பர் லீக்கிற்கு தகுதி பெறத் தவறிய நிலையில், சாம்சனின் தலைமைப் பண்பு அனுபவம், ஆட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அழுத்தத்தைக் கையாளும் திறன் ஆகியவை அவரை ஒரு வலுவான கேப்டன்சி தேர்வாக ஆக்குகின்றன என்றும், இது ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்த வழிவகுக்கும் என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 

Follow Us