AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரவக்குறிச்சி அருகே கோர விபத்து.. சபரிமலையிலிருந்து திரும்பிய 3 ஐயப்ப பக்தர்கள் பலி.. 4 பேர் படுகாயம்!!

Karur Aravakurichi highway accident: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மூவர் உயிரிழந்தனர். நாமக்கல்லைச் சேர்ந்த மணிகண்டன், கோவிந்தன், பழனிவேல் ஆகியோர் உயிரிழந்த நிலையில், எட்டு வயதுச் சிறுமி உட்பட நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரவக்குறிச்சி அருகே கோர விபத்து.. சபரிமலையிலிருந்து திரும்பிய 3 ஐயப்ப பக்தர்கள் பலி.. 4 பேர் படுகாயம்!!
கோர விபத்து
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 Nov 2026 08:48 AM IST

கரூர், நவ.28: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கரூர் – அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று தரிசனம் முடித்துவிட்டு, மாருதி ஈகோ காரில் தங்களது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். சேலம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது, அரவக்குறிச்சி ஆனந்தாஸ் ஹோட்டல் அருகே அதிகாலை சுமார் 1.45 மணியளவில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் அந்தக் கார் மோதி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்தத் தாக்கத்தால் கார் பலத்த சேதமடைந்ததுடன், பயணிகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டனர்.

இதையும் படிக்க: “வண்டலூரில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை!”.. போக்சோ சட்டத்தில் டிஎஸ்பி கைது.. பகீர் பின்னணி!!

மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு:

இந்தக் கோர விபத்தில் காரில் பயணித்திருந்த நாமக்கல்லைச் சேர்ந்த மணிகண்டன், கோவிந்தன் மற்றும் பழனிவேல் ஆகிய மூன்று ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். புனிதப் பயணம் முடிந்து சொந்த ஊர் திரும்பும் வழியில் மூவரும் உயிரிழந்தது சக பயணிகள், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் விபத்து தொடர்பான முதற்கட்ட விவரங்களைக் காவல்துறையினர் சேகரித்து அடுத்தகட்டச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி:

இந்தச் சாலை விபத்தில் காரில் பயணித்த தனுஷ், ஹரிஷ், சிதம்பரம் மற்றும் எட்டு வயதுச் சிறுமி தனிஷ்கா ஆகிய நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்திலிருந்து காயமடைந்த நான்கு பேரும் உடனடியாக மீட்கப்பட்டு, முதற்கட்ட சிகிச்சைக்காக அரவக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களின் உடல்நிலை மற்றும் கூடுதல் சிகிச்சைத் தேவை கருதி, மேல் சிகிச்சைக்காகக் கரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.. கடலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவு!!

லாரி விவரம் மற்றும் காவல்துறை விசாரணை:

விபத்தின் போது லாரியில் இருந்த ஸ்பேர் டயர் கழண்டு விழுந்த நிலையில், அந்த லாரி நிற்காமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. முன்னால் சென்ற அந்த லாரி எது என்பது குறித்தும், விபத்து நேர்ந்ததற்கான சூழ்நிலைகள் குறித்தும் பல்வேறு கோணங்களில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கரூர் – அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us