IND vs NZ: 33 டெஸ்ட் போட்டிகள்.. வெவ்வேறு ஸ்டேடியத்தில் களம்.. வித்தியாசமான சாதனை படைத்த ஜெய்ஸ்வால்!
Yashasvi Jaiswal's Unique Record: யஷஸ்வி ஜெய்ஸ்வால், தனது அறிமுகத்திற்குப் பிறகு 33 டெஸ்ட் போட்டிகளை வெவ்வேறு மைதானங்களில் விளையாடி உலக சாதனை படைத்துள்ளார். சஞ்சய் மஞ்ச்ரேகருடன் இந்த தனித்துவமான சாதனையைப் பகிர்ந்துகொண்ட ஜெய்ஸ்வால், சச்சின் டெண்டுல்கரையும் முந்தியுள்ளார். அடுத்த போட்டியில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்லை எட்டி, வெவ்வேறு மைதானங்களில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைக்கவுள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (IND vs NZ) இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக ஹாக்லி ஓவல் ஸ்டேடியத்தில் கால் வைத்த உடனே யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) வித்தியாசமான வரலாறு ஒன்றை படைத்தார். அதாவது தனது 33 டெஸ்ட் போட்டிகளையும் வெவ்வேறு ஸ்டேடியங்களில் விளையாடிய உலகின் இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். ஜெய்ஸ்வால் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அன்று முதல், ஜெய்ஸ்வால் தான் விளையாடிய 33 டெஸ்ட் போட்டிகள் ஒவ்வொன்றையும் வெவ்வேறு ஸ்டேடியத்தில் விளையாடியுள்ளார்.
ALSO READ: விக்கெட் எடுக்காத விரக்தி.. பவுலிங் ஆக்ஷனை மாற்றினாரா பும்ரா..? வைரலாகும் வீடியோ!
அறிமுகமானதிலிருந்து வெவ்வேறு ஸ்டேடியங்களில் அதிக டெஸ்ட் போட்டிகள்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பிறகு, தங்களது முதல் 33 டெஸ்ட் போட்டிகளை வெவ்வேறு மைதானங்களில் விளையாடியதற்கான உலக சாதனையை சஞ்சய் மஞ்ச்ரேகருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தப் பட்டியலில் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 2ம் இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது முதல் 32 டெஸ்ட் போட்டிகளை 32 வெவ்வேறு ஸ்டேடியங்களில் விளையாடினார். இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் ராம்டின் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.




- 33 டெஸ்ட் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (இந்தியா)
- 33 டெஸ்ட் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா)
- 32 டெஸ்ட் போட்டிகள் – சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)
- 24 டெஸ்ட் – ஜவகல் ஸ்ரீநாத் (இந்தியா)
- 24 டெஸ்ட் போட்டிகள் – தினேஷ் ராம்டின் (வெஸ்ட் இண்டீஸ்)
இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 7 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு எதிராக 10 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தலா 5 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தலா 4 போட்டிகளிலும், வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு எதிராக தலா 2 போட்டிகளிலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியிலும் விளையாடியுள்ளார்.
ALSO READ: SENA நாடுகளில் தொடக்க வீரராக அதிக அரைசதம்.. காம்பீரை முந்திய ஜெய்ஸ்வால்..!
இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வருகை தரும்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் உள்ள விசிஏ மைதானத்தில் நடைபெறும். ஜெய்ஸ்வால் இந்த ஸ்டேடியத்தில் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் இதுவரை டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை. எனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதன் மூலம், யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அறிமுகத்திற்குப் பிறகு வெவ்வேறு மைதானங்களில் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற உலக சாதனையை படைப்பார்.