பெண்கள் சுயதொழில் தொடங்க ‘சிங்கப்பெண் கடன்’ திட்டம்: எப்படி விண்ணப்பிப்பது?
பெண்கள் புதிதாக சுயதொழில் தொடங்கவும், ஏற்கெனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்தவும் உதவும், Singappen Loan Scheme : கூட்டுறவுத் துறையின் 'சிங்கப்பெண் கடன்' திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 28 : பெண்கள் சுயதொழில் தொடங்க ‘சிங்கப்பெண் கடன்’ திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம் என்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டோர் இத்திட்டம் மூலம் கடனுதவி பெறலாம் எனவும் அமைச்சர் காந்திராஜ் (Minister Gandhiraj) தெரிவித்துள்ளார். கடன் பெறுகிறவர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி கடன் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
பெண்கள் சுயதொழில் தொடங்க ‘சிங்கப்பெண் கடன்’ திட்டம்
பெண்கள் புதிதாக சுயதொழில் தொடங்கவும், ஏற்கெனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்தவும் உதவும், கூட்டுறவுத் துறையின் ‘சிங்கப்பெண் கடன்’ திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தெரிவித்துள்ளார். பெண்களின் பொருளாதார தற்சார்பை உறுதி செய்வதும், அவர்களைத் தன்னம்பிக்கை மிக்க தொழில்முனைவோராக உயர்த்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, அதிக வட்டி வசூலிக்கும் கந்துவட்டிக்காரர்களின் பிடியிலிருந்து பெண்களை மீட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்




யாரெல்லாம் கடன் பெறலாம்?
- மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள்
- கைம்பெண்கள்
- கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்
- பெண் தொழில்முனைவோர்
- பணிபுரியும் பெண்கள்
இதுவரை 41,369 பேருக்குக் கடன்
இந்த 2026 ஆம் ஆண்டில், நவம்பர் 2026 வரை, இத்திட்டத்தின் கீழ் 41,369 பெண்களுக்கு மொத்தம் ரூ.3,428.49 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு பயனாளிக்குச் சராசரியாக சுமார் ரூ.8.3 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் 13,344 பேருக்கு ரூ.1,432.02 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்களுக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 3,154 பயனாளிகளுக்கு ரூ.29.50 கோடியும், நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் 973 பேருக்கு ரூ.96.56 கோடியும், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் 641 பேருக்கு ரூ.69.43 கோடியும் கடனாக வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி மூலம் 285 பயனாளிகளுக்கு ரூ.27.60 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 41,369 பெண்களுக்கு ரூ.3,428.49 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “யாருக்கும் அனுமதி கிடையாது!”.. போலீஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் பரபரப்பு!!
எப்படி விண்ணப்பிப்பது?
புதிதாகச் சுயதொழில் தொடங்க விரும்பும் பெண்களும், ஏற்கெனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்த விரும்புவோரும், தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தை நேரில் அணுகிக் கடனுதவி பெறலாம். இத்திட்டம் தொடர்பான விவரங்களைப் பெறவும், தேவையான உதவிகளுக்கும், 98840 00845 என்ற வாட்ஸ்அப் உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.