AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தொகுதி மறுவரையறை மசோதா.. நிபந்தனைகளுடன் திமுக ஆதரவு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

DMK Supports Delimitation Bill: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதாக்கள் தொடர்பாக, அனைத்து மாநிலங்களுக்கும் தற்போதைய எண்ணிக்கையிலிருந்து 50 விழுக்காடு கூடுதல் இடங்கள் வழங்கும் நிலைக்குத் திமுக ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது. தேசத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் எது நல்லது என்பதை நீண்ட விவாதத்திற்குப் பின் முடிவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதா.. நிபந்தனைகளுடன் திமுக ஆதரவு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
ஆ.ராசா
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 Nov 2026 11:43 AM IST

சென்னை, நவ.28: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்களில் திமுகவில் 21 மக்களவை உறுப்பினர்களும், 8 மாநிலங்களவை உறுப்பினர்களும் உள்ள நிலையில், இந்த மசோதா விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தேசிய அளவில் எழுந்திருந்தது.

இதையும் படிக்க: அப்போது எதிர்ப்பு, இப்போ ஆதரவா? தொகுதி மறுவரையறை விவகாரம்.. திமுக எம்பிக்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

7.18% பங்கீட்டைப் பாதுகாப்பதும் 50% உயர்வுக் கோணமும்:

மக்கள் தொகை அடிப்படையில் முதற்கட்டமாக நிறைவேற்றப்பட உள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு முன்னதாகவே திமுக அரசு எதிர்ப்புத் தெரிவித்திருந்த சூழலில், தற்போதைய கூட்டத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையாமல் பாதுகாப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பங்கீடு 7.18 சதவீதமாக உள்ள நிலையில், அதனைக் குறைக்கும் எந்தவொரு மசோதாவையும் ஆதரிக்கக் கூடாது என்ற கருத்தும், அனைத்து மாநிலங்களிலும் சராசரியாக 50 சதவீதம் இடங்களை உயர்த்தும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டால் அதனை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் எம்பிக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

செய்தியாளர் சந்திப்பில் ஆ. ராசா வெளியிட்ட அறிவிப்பு:

இந்த எம்.பிக்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி. ஆ.ராசா, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியத் தீர்மானத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அனைத்து மாநிலங்களுக்கும் தற்போதுள்ள எண்ணிக்கையிலிருந்து 50 விழுக்காடு அதிகமாக இட ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும் என்ற நிலைக்குத் திமுக சார்பில் ஆதரவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இது திடீரென எடுக்கப்பட்ட முடிவல்ல என்றும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த போது சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் சென்னைக்கு எதிர்க்கட்சித் தலைவர்களையும் முதலமைச்சர்களையும் அழைத்து கூட்டு நடவடிக்கை குழு அமைத்து விவாதிக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

7.18% பங்கீடு முதல் 7.21% வரையிலான கணக்கீடு:

திமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும், கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டின் பங்களிப்பு குறையக் கூடாது என்ற ஒரே மாதிரியான ஒத்திசைவான நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகத் தெரிவித்தார். 1971-ஆம் ஆண்டு இந்திரா காந்தி காலத்தில் நடைபெற்ற மறுவரையறையின் போது தமிழ்நாட்டின் பங்கு 7.18 சதவீதமாக இருந்ததாகவும், அப்போது எண்ணிக்கையில் இரண்டு இடங்கள் குறைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய கணக்கீட்டில் அந்த மாதிரி எந்த இழப்பும் இல்லை என்றும், 7.18 என்பதற்குப் பதிலாக மிகச் சரியாக 7.21 என்ற அளவில் தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ளதாகவும், எனவே இதில் நட்டம் எதுவும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார். மேலும், நியாயமான மறுவரையறை என்ற அடிப்படையில் முன்னர் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஏற்பவே தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க: செஞ்சி சிறுமி மாயமான வழக்கு.. ரூ.2 லட்சம் தருவதாக கூறி 3 இளைஞர்களை அடித்து துன்புறுத்திய சிபிசிஐடி போலீசார்.. பரபரப்பு புகார்!

தேசிய மற்றும் மாநில அரசியலில் முக்கியத்துவம்:

எதிர்க்கட்சிகள் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாகத் தங்களது நிலைப்பாடுகளை வலியுறுத்தி வரும் நிலையில், திமுக எம்பிக்கள் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மற்றும் தொடர்ச்சியான ஆலோசனைகளின் பின்னணியில், அனைத்து மாநிலங்களுக்கும் 50 விழுக்காடு கூடுதல் இடங்களை வழங்கும் நிலைப்பாட்டை ஆதரிப்பதாகத் திமுக தரப்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு, தேசிய மற்றும் மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Follow Us