AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அப்போது எதிர்ப்பு, இப்போ ஆதரவா? தொகுதி மறுவரையறை விவகாரம்.. திமுக எம்பிக்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

MK Stalin Meeting With MPS: தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக திமுக எம்பிக்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். நவம்பர் 30ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், மசோதா மீதான திமுகவின் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது எதிர்ப்பு, இப்போ ஆதரவா? தொகுதி மறுவரையறை விவகாரம்.. திமுக எம்பிக்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 28 Nov 2026 09:14 AM IST

நவமபர் 28, 2026: தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக திமுக எம்பிக்களுடன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நவம்பர் 30ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம்

திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், மு.க.ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில் அனைத்து திமுக எம்பிக்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நவம்பர் 30 முதல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மக்களவையில் நவம்பர் 30ஆம் தேதியும், மாநிலங்களவையில் டிசம்பர் 2ஆம் தேதியும் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மசோதாக்களை முன்னெடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: அரவக்குறிச்சி அருகே கோர விபத்து.. சபரிமலையிலிருந்து திரும்பிய 3 ஐயப்ப பக்தர்கள் பலி.. 4 பேர் படுகாயம்!!

திமுகவின் நிலைப்பாடு என்ன?

தொகுதி மறுவரையறை நடவடிக்கை தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் என திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் வட மாநிலங்களுக்கு அதிக இடங்கள் கிடைத்து, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

ஏற்கனவே இந்த மசோதாவுக்கு எதிராக திமுக போராட்டங்களையும் நடத்தியுள்ளது. தற்போது இந்த விவகாரத்தில் திமுக தனது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டுவரக்கூடும் என்றும், சில நிபந்தனைகளுடன் மசோதாவை ஆதரிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும் படிக்க: “வண்டலூரில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை!”.. போக்சோ சட்டத்தில் டிஎஸ்பி கைது.. பகீர் பின்னணி!!

மேலும், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் தற்போதைய மக்களவை இடங்களிலேயே அமல்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இதனால் இந்தக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us