AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Rate: மீண்டும் குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் எவ்வளவு தெரியுமா?

Chennai Gold Price: சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.11,720-க்கும், ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.93,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. 1 கிராம் தூய தங்கம் ரூ.12,750-க்கும், 8 கிராம் ரூ.1,02,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate: மீண்டும் குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் எவ்வளவு தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Nov 2026 10:11 AM IST

நவம்பர் 28, 2026: தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் நிலையில், நவம்பர் 28ஆம் தேதியான இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கடும் உச்சத்தில் இருந்த தங்கம், அதன் பிறகு தொடர் சரிவை சந்தித்து வந்தது. இதன் காரணமாக ரூ.16,000-ல் இருந்து தங்கம் விலை ரூ.11,000 ஆக குறைந்துள்ளது. இந்த நிலையில், இனி வரும் காலங்களில் தங்கம் விலை குறையுமா, உயருமா என்ற குழப்பம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.

சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.11,720-க்கும், ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.93,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. 1 கிராம் தூய தங்கம் ரூ.12,750-க்கும், 8 கிராம் ரூ.1,02,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் இன்று எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.170-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: கலப்படம் இல்லாத தங்கத்தை வாங்குவது எப்படி.. இவற்றை கட்டாயம் பின்பற்றுங்கள்!

தங்கம் விலை மீண்டும் குறையுமா?

நவம்பர் மாதத் தொடக்கத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை, இரண்டாவது வாரத்தில் இருந்து சரிவைச் சந்தித்தது. குறிப்பாக நவம்பர் 17ஆம் தேதி சவரன் விலை ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்தது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, பெடரல் வங்கியின் வட்டி விகித முடிவுகள், பணவீக்கம் மற்றும் முதலீட்டாளர்களின் தேவை உள்ளிட்ட காரணிகள் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை வட்டி அல்லது வருமானம் தராத சொத்துகளாக உள்ளன. ஆனால், அமெரிக்க மத்திய வங்கி வெளியிடும் பத்திரங்களில் முதலீடு செய்யும் பட்சத்தில் வட்டியுடன் கூடிய வருமானம் கிடைக்கும். எனவே தான், வட்டி உயர்த்தப்படும் பட்சத்தில் முதலீட்டாளர்களின்  கவனம் தங்கத்தின் பக்கம் திரும்புகிறது. அதுவே தங்கம் விலை குறைய காரணமாக உள்ளது.

மேலும் படிக்க: தங்கம் விலை சரிவு: நகைக்கடன் வாங்கியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் வங்கிகள் – என்ன காரணம்?

தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் இருக்கக்கூடும் என்றும், அடுத்த ஓரிரு மாதங்களில் மீண்டும் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர். எனவே, தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் ஒரே நேரத்தில் மொத்தமாக முதலீடு செய்வதற்குப் பதிலாகப் படிப்படியாக முதலீடு செய்வது குறித்து ஆலோசிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Follow Us