Credit Card : கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸ் உண்மையாகவே பயனுள்ளதா?.. இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்!
Credit Card Reward Points | தற்போதைய காலக்கட்டத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்தாத நபர்களை பார்ப்பதே மிகவும் அரிதாக உள்ளது. அந்த அளவுக்கு பலரும் தங்களது கூடுதல் நிதி தேவை, ஷாப்பிங் ஆகியவற்றுக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸ் குறித்து பார்க்கலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் கிரெடிட் கார்டு (Credit Card) பயன்படுத்த தொடங்கிவிட்டனர். விலைவாசி ஒருபுறம் இருக்க, சம்பள உயர்வு வராமலே உள்ளது. இதன் காரணமாக பலரும் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் கிரெடிட் கார்டில் சலுகைகள், ரிவார்டு பாயிண்ட்ஸ் (Reward Points) ஆகியவை வழங்கப்படுவதன் காரணமாக கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸ் உண்மையிலேயே பயனுள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதிக அளவு கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பொதுமக்கள்
பணத்தை முன்கூட்டியே செலவு செய்துவிட்டு, அந்த தொகையை தவணை முறையிலோ அல்லது 40 நாட்களுக்கு பிறகோ திரும்ப செலுத்த அனுமதி வழங்கப்படுவதன் காரணமாக பலரும் கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். கிரெடிட் கார்டை பயன்படுத்தி லாபமடைவர்களும் உண்டு, அதேபோல கிரெடிட் கார்டு பயன்படுத்தி அதிக வட்டி செலுத்த முடியாமல் நிதி சுமையில் சிக்கிக்கொள்வதும் உண்டு. அதிலும் குறிப்பாக, சிலர் கிரெடிட் கார்டுகளில் ரிவார்டு பாயிண்ட்ஸ் கிடைக்கிறது என கூறி வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், அதில் கவனிக்க வேண்டிய மறைமுகமான விஷயங்கள் சில உள்ளன.
இதையும் படிங்க : மஹிந்திரா பக்கா பிளான்.. அடுத்தடுத்து வரப்போகும் புதிய வாகனங்கள்!




பணத்துக்கு எவ்வளவு ரிவார்டு பாயிண்ட்ஸ் கிடைக்கிறது?
நீங்கள் அடிக்கடி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நபராக இருந்தால் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. அதுதான், நீங்கள் பயன்படுத்தும் பணத்துக்கு எவ்வளவு ரிவார்டு பாயிண்ட்ஸ் கிடைக்கிறது என்பதுதான். பிறகு அந்த ரிவார்டு பாயிண்ட்ஸ் உங்களுக்கு எவ்வளவு பண மதிப்பை தரும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டியது தான். உதாரணமாக நீங்கள் பயனத்திற்காக உங்களது ரிவார்டு பாயிண்ட்ஸ்களை பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு ரூ.1 கிடைக்கும். இதுவே, ஷாப்பிங்கில் பயன்படுத்துகிறீர்கள் என்றால் வெறும் 25 பைசா மட்டுமே கிடைக்கும்.
இதையும் படிங்க : தங்கம் விலை சரிவு: நகைக்கடன் வாங்கியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் வங்கிகள் – என்ன காரணம்?
Redemption Value எதில் அதிகமாக உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்
வங்கிகள் பல விதமான கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. அவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன. எனவே, நீங்கள் கிரெடிட் கார்டு வாங்க உள்ளீர்கள் என்றால், அந்த கிரெடிட் கார்டின் Redemption Value எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்துக்கொண்டு வாங்குங்கள். அதுதான் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும் என்பது குறிப்பிடத்தக்கது.