AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கைது – 201 பதிவுகள் நீக்கம்… முரணாக பதிவுகளை தவிருங்கள் – காவல்துறை எச்சரிக்கை

Kallakurichi MLA Arrest : மாவட்ட ஆட்சியர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் (Arul Vignesh) நவம்பர் 27, 2026 இன்று கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இதுகுறித்துத் தமிழ்நாடு காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கைது – 201 பதிவுகள் நீக்கம்… முரணாக பதிவுகளை தவிருங்கள் – காவல்துறை எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 Nov 2026 22:17 PM IST

சென்னை, நவம்பர் 27 : மாவட்ட ஆட்சியர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் (Arul Vignesh) நவம்பர் 27, 2026 இன்று கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இதுகுறித்துத் தமிழ்நாடு காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. அதில் இந்தச் சம்பவம் தொடர்பான எந்தத் தகவலையும் பொதுவெளியில் வெளியிடவோ, பகிரவோ, பரப்பவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது

பெண் ஆட்சியருக்கு அநாகரிகமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக ஆட்சியர் அளித்த புகாரில் நவம்பர் 27, 2026 இன்று மாலை சுமார் 6.30 மணியளவில், வழக்கின் விசாரணை அதிகாரியான திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையிலான போலீஸார், அருள் விக்னேஷை அவரது வீட்டில் கைது செய்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இதையும் படிக்க : திருப்பரங்குன்றம் விவகாரம்.. அடுத்தக்கட்ட நகர்வு என்ன?.. முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!!

இதுதொடர்பாகத் தமிழ்நாடு காவல்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது தொடர்பாக 23.11.2026 அன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாகப் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், அதே நாளில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 91/2026-ன் கீழ் உரிய சட்டப்பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

காவல்துறையின் பதிவு

 

தொடக்கத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் 24.11.2026 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங், சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் என். காமினி, மேற்பார்வையில் இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டார்.விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

201 சமூக ஊடகப் பதிவுகள் நீக்கம்

இச்சம்பவம் தொடர்பாக, உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவினர் இணைந்து 201 சமூக ஊடகப் பதிவுகளை நீக்கியுள்ளனர். மேலும், இது தொடர்பாக எந்தவொரு தகவலையும் பொதுவெளியில் வெளியிடவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என மாண்புமிகு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அந்த உத்தரவுக்கு முரணாக பதிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் படிக்க : மின்சார வாகனங்கள் சேவை, டயர்கள், உரங்கள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டியில் மாற்றம் – எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பான எந்தத் தகவலையும் பொதுவெளியில் வெளியிடவோ, பகிரவோ, பரப்பவோ கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அந்த உத்தரவுக்கு முரணான பதிவுகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Follow Us