“ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்களா?”.. அனைவரும் தண்டிக்கப்படும் வரை ஓய மாட்டோம்.. அருள் விக்னேஷ் கைது குறித்து மு.க.ஸ்டாலின் காட்டம்!
MK Stalin Slams to Protect TVK MLA Arul Vignesh: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது தொடர்பாகத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். எம்எல்ஏவைக் காக்கப் பொய் மேல் பொய் சொல்லப்பட்டதாகவும், சமரசத்திற்கு அழுத்தம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீதி விசாரணை நடத்தப்பட்டு அனைவரும் தண்டிக்கப்படும் வரை ஓய மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
சென்னை, நவ.27: கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் காட்டமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாப்பதற்காகப் பொய் மேல் பொய்களைக் கூறியதாக அவர் விமர்சித்துள்ளார். அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக்கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு நன்னடத்தைச் சான்று வழங்கும் வேலையில் இறங்கியதாகவும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதையும் படிக்க: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது.. சிறப்பு விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையில் நடவடிக்கை!
பாதிக்கப்பட்ட அதிகாரியின் துணிச்சலுக்குப் பாராட்டு:
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள்.
அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள்.
பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள்.
அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார்.
உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார்.
119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும்.
சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!
— M.K.Stalin (@mkstalin) November 27, 2026
மேலும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும் மு.க. ஸ்டாலின் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு பல்வேறு முனைகளில் இருந்தும் கொடுக்கப்பட்ட அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார் எனப் பாதிக்கப்பட்ட அதிகாரிக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை வெளிவருவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் மீறி, அதிகாரியின் துணிச்சலான நடவடிக்கை காரணமாகவே வழக்கு அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
நீதிமன்றம்,மகளிர் ஆணையத்தின் சீற்றத்தால் கைது:
உயர்நீதிமன்றம் மற்றும் மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தாலேயே வேறு வழியின்றி இப்போது தவெக எம்எல்ஏ கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பம் முதலே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு வந்த நிலையில், நீதிமன்றத்தின் கடுமையான பார்வையும் மகளிர் ஆணையத்தின் தலையீடும் ஏற்பட்ட பிறகே காவல்துறை தரப்பில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு – தர்காவின் பாதுகாப்புக்கு சிஆர்பிஎஃப் படைக்கு உத்தரவு
சமரச அழுத்தம் கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை:
குறிப்பாக, 119 நாட்களாக இந்தப் புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதுடன், வழக்கைச் சமரசமாக முடித்துக்கொண்டு செல்ல அழுத்தம் கொடுத்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, இந்த விவகாரத்தில் தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை தாங்கள் ஓயமாட்டோம் என்று அவர் தனது பதிவில் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.