AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு – தர்காவின் பாதுகாப்புக்கு சிஆர்பிஎஃப் படைக்கு உத்தரவு

Thiruparankundram Deepam Supreme Court Order : திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நவம்பர் 28, 2026 நாளை  தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும், தர்காவிலிருந்து குறைந்தது 50 மீட்டர் தொலைவில் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவை அமல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு – தர்காவின் பாதுகாப்புக்கு சிஆர்பிஎஃப் படைக்கு உத்தரவு
திருப்பரங்குன்றம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 Nov 2026 16:02 PM IST

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் (Thiruparankundram) நவம்பர் 28, 2026 நாளை  தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும், தர்காவிலிருந்து குறைந்தது 50 மீட்டர் தொலைவில் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவை அமல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமனம் செய்யவும்,  கோயில், தர்கா பாதுகாப்பை உறுதிசெய்ய சிஆர்பிஎஃப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பேசியதாவது, தற்போதைய சூழலைப் பார்க்கும்போது, நாங்கள் முதலில் தெரிவிக்க விரும்பும் வார்த்தை அய்யோ (ALAS) என்பதுதான். தற்போதைய சூழலுக்கு மிகவும் பொருத்தமான வெளிப்பாடாக இந்த வார்த்தை இருக்கும். மிகுந்த வேதனையுடனும் மனத்துயரத்துடனும் இதனை தெரிவிக்கிறோம் என்று தெரிவித்தனர்.

இதையும் படிக்க : திருப்பரங்குன்றம் வழக்கு.. “உத்தரவை செயல்படுத்தினீர்களா?.. ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்!”.. உச்சநீதிமன்றம் கேள்வி!

இந்த வழக்கில் பேசிய நீதிபதிகள், திருப்பரங்குன்றம் தீப வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை நிராகரிக்கிறோம். உத்தரவை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுத்ததாகக் கூறி, அதற்கு ஆட்சியர் மன்னிப்பு கோரியுள்ளார். உத்தரவு நிறைவேற்றப்படாததற்கான பழியை முழுவதும் கோயில் நிர்வாகம் மீது ஆட்சியர் சுமத்த முயற்சித்துள்ளது என தெரிவித்தனர். இந்த வழக்கில் திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவை உச்ச நீதிமன்றம் கலைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் பேசிய நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவுகளை மெத்தனமாக கையாளும்போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தீர்ப்பை செயல்படுத்தாதது அரசமைப்புச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும். உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாதது மிகுந்த வேதனையை தருகிறது. இதுபோன்ற தருணங்களில் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுப்போம். நீதிமன்ற உத்தரவை மீறிவிட்டு தமிழக அரசு அளித்த அறிக்கை மனசாட்சியை உலுக்குகிறது. எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் நீதித்துறையின் நீரோட்டத்தை மாசுபடுத்துவதை சகிக்க மாட்டோம் என்று உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக தலைமைச் செயலர் நேரில் ஆஜராக வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் பற்றி தலைமைச் செயலர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் மலை அமைந்துள்ள பகுதி முழுவதும் சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். பாதுகாப்புக்கு உட்பட்டு திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் பக்தர்களை விளக்கேற்ற அனுமதிக்கலாம்.

இதையும் படிக்க : கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறதா.. உயர்நீதிமன்றம் எடுத்த நிலைப்பாடு!

பக்தர்களுக்கு அனுமதி

தர்காவில் இருந்து 50 மீட்டர் சுற்றளவு தாண்டி அனைத்து பக்கங்களிலும் தீபம் ஏற்றலாம்; தர்காவுக்கும் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்க வேண்டும். எந்த வகையிலும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவின் செயல்பாட்டில் தடங்கல் இருக்கக்கூடாது. நவம்பர் 24, தீபம் ஏற்றப்படாத நிலையில் நாளை தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவு; தீபம் ஏற்றும் நிகழ்வில் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்கலாம். உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து சுடர் எடுத்துச் சென்று, நவம்பர் 28, 2026 நாளை மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us