AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறதா.. உயர்நீதிமன்றம் எடுத்த நிலைப்பாடு!

Kallakurichi TVK MLA issue : கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டியதில் உடன்பாடு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அத்துடன், பெண் ஆட்சியர் விசாரணைக்காக வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறதா.. உயர்நீதிமன்றம் எடுத்த நிலைப்பாடு!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 27 Nov 2026 14:13 PM IST

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய தவெக எம்எல்ஏவுக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உடன்பாடு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு, கள்ளக்குறிச்சி தொகுதியின் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக ஆட்சியர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனிடையே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன், சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்பி கனிமொழி சோமு மனு தாக்கல் செய்திருந்தார்.

தவெக எம்எல்ஏ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உடன்பாடில்லை

இந்த மனு மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என திமுக வழக்கறிஞர் இளங்கோ வாதத்தை முன் வைத்திருந்தார். அப்போது, குறுக்கிட்ட நீதிபதி லட்சுமி நாராயணன் தவெக எம்எல்ஏ மீதான பெண் அதிகாரி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை. தமிழக காவல்துறையே திறமையான அமைப்புதான். தமிழக காவல்துறையில் திறமையான அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் படிக்க: அரசியல் அழுத்தம் காரணமா? அன்பில் மகேஷ் வழக்கு விசாரணையிருந்து நீதிபதி திடீர் விலகல்.. என்ன காரணம்!

தமிழகத்தில் சிபிஐ தனி கிளையை அமைக்க வேண்டும்

தமிழகத்தில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை பார்த்தால் தமிழகத்தில் சிபிஐ அமைப்பின் கிளை தான் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனால், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படவில்லை. இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியரின் கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணை இன்று மாலை 3:30 மணிக்கு காணொளி காட்சி மூலம் நடத்தப்படும் என்று கூறி விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார். இந்த வழக்கில் தவெக எம்எல்ஏ மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், காவல்துறை ஐஜி காமினி விசாரணை கண்காணிப்பு அதிகாரியாகவும், திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாகவும் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

தவெக எம்எல்ஏ விரைவில் கைது செய்ய நடவடிக்கை?

இவர்கள், கடந்த இரு நாட்களாக பெண் ஆட்சியர், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர். நேற்றும் விசாரணை தொடர்ந்த நிலையில், ஐஜி காமினி, டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலை சந்திப்பதற்காக சென்னை சென்றிருந்தார். இதனால், இந்த விவகாரத்தில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அமெரிக்கா- நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட 3 சுவாமி சிலைகள்.. தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்த தொல்லியல் துறை!

Follow Us