AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அமெரிக்கா- நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட 3 சுவாமி சிலைகள்.. தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்த தொல்லியல் துறை!

3 Idols Hand Over TN Police : அமெரிக்கா மற்றும் நெதர்லாந்தில் இருந்து மீட்கப்பட்ட 3 சுவாமி சிலைகளை தமிழக காவல்துறையிடம் இந்திய தொல்லியல் துறை ஒப்படைத்தது. இந்த சிலைகள் விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் கோவில்களுக்கு சொந்தமானது ஆகும் .

அமெரிக்கா- நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட 3 சுவாமி சிலைகள்.. தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்த தொல்லியல் துறை!
மீட்கப்பட்ட 3 சுவாமி சிலைகள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 27 Nov 2026 13:39 PM IST

அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து நாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 3 சுவாமி சிலைகளை தமிழக காவல்துறையிடம் இந்திய தொல்லியல் துறை ஒப்படைத்துள்ளது. இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுத்து வரும் முக்கிய நடவடிக்கையாக இந்திய தொல்லியல் துறை 16- ஆம் நூற்றாண்டை சேர்ந்த பெண்களை சிலை உள்பட 3 சிலைகளை தமிழக காவல்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. புதுடெல்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் தலைமையகத்தில் இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குனர் யதுபீர் சிங் ராவத் மற்றும் பிற பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட 2 வெண்கல சிலைகளும், நெதர்லாந்தின் ஹேக் நகரில் இருந்து கொண்டுவரப்பட்ட மற்றொரு வெண்கலம் சிலையும் தமிழகத்தை வந்தடைந்துள்ளன.

16- ஆம் நூற்றாண்டை சேர்ந்த சுவாமி சிலை

16- ஆம் நூற்றாண்டை சேர்ந்த பரவை நாச்சியாருடன் கூடிய சுந்தர புனிதரின் வெண்கல சிலை விஜயநகர காலத்தை சேர்ந்ததாகும். ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தின் படி, 16- ஆம் நூற்றாண்டில் விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவிலை சேர்ந்த சுந்தரர் மற்றும் அவரது மனைவி பரவையின் வெண்கல சிலை 2018- ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோவில் விழுப்புரத்தில் உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது. 1956- ஆம் ஆண்டு இந்த கோவிலில் அந்த சிற்பம் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதன் அசல் புகைப்படம் பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம் இணைந்து புகைப்பட காப்பகத்தில் உள்ளது.

மேலும் படிக்க: ஆண்டுக்கு 55 நாட்கள் மட்டும் பள்ளி செயல்படுமா? நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் சொல்லும் உண்மை என்ன?

11- ஆம் நூற்றாண்டை சேர்ந்த கண்ணப்பர் நாயனார் சிலை

தமிழ்நாட்டுக் கோயில்களில் இருந்து அந்த வெண்கல சிலை எப்போது அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பது உறுதியாக தெரிய வரவில்லை ஏன்னா அருங்காட்சியகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிலை நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு அக்னீஸ்வரசுவாமி கோவிலில் இருந்து கிடைத்த 11- ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால வெண்கல கண்ணப்பர் நாயனார் சிலையாகும். இது சைவ புனிதரை திரிபங்க நிலையில் நின்ற கோலத்திலும், அவரது வலது கை கண்ணை நோக்கி உயர்த்தப்பட்ட நிலையிலும் உள்ளது.

12- ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால வெண்கல சிலை

இது நெதர்லாந்தின் ஹேக் நகரில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சைவ சமயத்தின் 63 புனிதர்களின் ஒன்றாக இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட இந்த சிலை பின்னர், ஐரோப்பிய நுண்கலை கண்காட்சியில் கண்டெடுக்கப்பட்டது. 3- ஆவது கலைப்பொருள் சோமஸ்கந்தன் ஆகும். இது 12- ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால வெண்கல சிலையாகும். இது தனது மனைவி பார்வதி மற்றும் மகன் முருகன் ஆகியோருடன் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் ஒரு தென்னிந்திய இந்து உருவவியல் வடிவமாக அமைந்துள்ளது.இது தஞ்சாவூர் சிவன் கோயிலுக்கு சொந்தமானதாகும்.

மேலும் படிக்க: பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கிகள் கடத்தல்.. பஞ்சாபில் ட்ரோன்கள் மூலமாக நடக்கும் சம்பவம்.. காவல்துறை அதிர்ச்சி தகவல்!

Follow Us