AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

2026ம் ஆண்டில் தமிழ் சினிமாவை காப்பாற்றிய படங்கள் அதுதான் – திருப்பூர் சுப்ரமணியம் பேச்சு!

Tiruppur Subramaniam: தமிழ் சினிமாவில் பழம்பெரும் திரைப்பட விநியோகஸ்தரர் மற்றும் திரையரங்குகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவராக இருந்துவருபவர் திருப்பூர் சுப்ரமணியம். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நிலையில், அதில் 2026ம் ஆண்டில் தமிழ் திரையுலகை காப்பாற்றிய திரைப்படங்களை கூறியுள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

2026ம் ஆண்டில் தமிழ் சினிமாவை காப்பாற்றிய படங்கள் அதுதான் – திருப்பூர் சுப்ரமணியம் பேச்சு!
சூர்யா மற்றும் திருப்பூர் சுப்ரமணியம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 27 Nov 2026 12:55 PM IST

கோலிவுட் சினிமாவில் (Kollywood Cinema) மக்கள் மத்தியில் பிரபலமான தயாரிப்பாளர், விநியோகஸ்தரராக இருந்துவருபவர் திருப்பூர் சுப்ரமணியம் (Tiruppur Subramaniam). இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒருவராக இருக்கிறார். தென்னிந்திய திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இவர் இருந்துவரும் நிலையில், சினிமாவில் பல்வேறு விஷயங்கள் இவருக்கு அத்துப்புடி. இவர் தமிழில் திரைப்படங்களை வாங்கி விநியோகம் செய்யும் வேலையையும் சிறப்பாக செய்துவருகிறார். தமிழ் சினிமாவில் நடக்கும் விஷயங்கள் மற்றும் திரையரங்குகள் உரிமையாளர்களுக்கு இடையே நடக்கும் சதவீத பங்கு பிரிப்பதில் எல்லாவற்றிலும் திறன்பட பணியாற்றிவருகிறார் திருப்பூர் சுப்பிரமணியன்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இவர் பேசிய நிலையில், 2026ம் ஆண்டில் தமிழ் சினிமாவை காப்பாற்றிய திரைப்படங்களை வரிசையாக தெரிவித்துள்ளார். அதில் சூர்யாவின் (Suriya) மூன்று திரைப்படங்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சூர்யா 49, 50 நம்பர் கேம்-ல் மாட்ட எனக்கு விருப்பமில்லை.. சூர்யாவுடன் அடுத்த படத்தில் இணைவது பற்றி ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!

2026 தமிழ் திரையுலகை காப்பாற்றிய திரைப்படங்கள் குறித்து பேசிய திருப்பூர் சுப்ரமணியம்:

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய திருப்பூர் சுப்ரமணியம், அதில் “சூர்யா இந்த வருடத்தில் 3 திரைப்படங்கள் கொடுத்தாரு. அதனால்தான் தமிழ் சினிமா நல்ல இருக்கிறது. சூர்யாவின் அந்த மூன்று படங்கள்தான் திரைத்துறையை இந்த வருடத்தில் காப்பாற்றியது. மேலும் ஜெயிலர் 2 இந்த 4 படங்கள் இந்த வருடத்தில் தமிழ் சினிமாவை காப்பாற்றியது. மேலும் ஜன நாயகன் படமும் வந்தது.

இதையும் படிங்க: பேக் டூ பேக் 3 கெட்டப்.. இந்திய சினிமாவில் நடிகை சாய் பல்லவி புரியும் சாதனை!

ஜன நாயகன் படம் 2026 ஜனவரி மாதத்திலே வரவேண்டியது. அதை நான் மறந்துவிட்டேன். இந்த 5 படங்கள்தான் இந்த வருடத்தில் தமிழ் சினிமாவை காப்பாற்றியது. வேறு எந்த படங்களும் இந்த அளவுக்கு பெரிய ஈடுபாட்டை கொடுக்கவில்லை” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவை காப்பாற்றிய படங்கள் குறித்து திருப்பூர் சுப்ரமணியம் பேசியது தொடர்பான வீடியோ பதிவு:


இந்த 2026ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் மட்டும் கிட்டத்தட்ட 3 திரைப்படங்கள் பேக் டூ பேக் வெளியாகி மிக பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றிருந்தது. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் கருப்பு திரைப்படம், இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சீன் என மூன்று படங்கள் வெளியானது. இந்த 3 படங்களும் ஒரே ஆண்டில் வெளியாகி சூர்யாவுக்கு மொத்தமாக ரூ 700 முதல் 800 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us