பிசாசு படம் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி
Vijay Sethupathi talks about Pisasu movie | இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள படம் ட்ரெயின். இந்தப் படத்தின் புரமோஷனின் போது நடிகர் விஜய் சேதுபதி பிசாசு படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பிறகு நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து நடித்தால் நாயகனாக மட்டும் இன்றி தொடர்ந்து வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தொடர்ந்து பான் இந்திய மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து இதுவரை இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி முன்னதாக வெளியான காந்தி டால்க்ஸ் மற்றும் பத்தா ஆகியப் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதிலும் குறிப்பாக இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான பத்தா படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழ் மொழியில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ட்ரெயின். இயக்குநர் மிஸ்கின் எழுதி இயக்கிய இந்தப் படத்தின் புரமொஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி பிசாசு படம் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.




பிசாசு படம் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி:
விஜய் சேதுபதி பேசியதாவது, மிஷ்கின் பிசாசு 2 படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். அது மிகச் சிறப்பாக இருந்தது, எனக்கு மிகவும் பிடித்துப்போனது. பிசாசு படத்தில் வரும் பேயைக் கண்டு நாம் பயப்படுவதில்லை; மாறாக, அந்தப் பேயைச் சுற்றியுள்ள உணர்வுபூர்வமான பிணைப்பை அவர் மிக அழகாகக் காட்டியிருப்பார். குறிப்பாக, புகைபோக்கியிலிருந்து அந்தப் பேய் வெளியே வரும் காட்சி, ராதா ரவியின் நடிப்பு மற்றும் காட்சியமைப்பு என அனைத்தும் அபாரமாக இருந்தன. பிசாசு 2 இன்னும் கூடுதல் சிறப்பாக அமைந்திருந்தது, அதன் திரைக்கதை மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தது. அவரிடம், உங்கள் படத்தில் எனக்கு நடிக்க ஏதேனும் ஒரு கதாபாத்திரம் கிடைத்தால், அது வெறும் இரண்டு நாள் படப்பிடிப்பாக இருந்தாலும் சரி, நான் நிச்சயமாக நடிக்க விரும்புகிறேன் என்று கூறினேன்.
Also Read… நீ யாருனு காட்டுறதுக்காகதான வந்த.. அன்சரை லெஃப்ட் ரைட் வாங்கிய மனைவி – வைரலாகும் ப்ரோமோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#VijaySethupathi: Mysskin narrated the story of #Pisasu2, and it was superb. I loved it. I liked #Pisasu, a ghost that we don’t get scared of, he shows it in an emotional and connected us. Especially the scene where it comes out of the chimney, #RadhaRavi’s performance and cherograohy were extraordinary.
#Pisasu2 was even more extraordinary. The writing was brilliant. I told him that if there was any role for me to act in, even for at 2 two days, I would love to do it.
#Mysskin: I told him that night. I received a phone call from him, and he said, “I have 2 days available. I must act in this movie.”
I didn’t have any characters for him. I had written a small doctor’s character. When #VijaySethupathi came on board, I rewrote the scene, not expanded it. It helped me go deeper into the character. He came and completed it in 2 two days, delivering an extraordinary performance.
The movie will come, and you will understand. This is the heart. Which big actor has a heart like this? I have requested #VijaySethupathi not to act as a villain. He is not a villain; he is a real-life hero.
#VJS : Acting as a villain gives you freedom; you can be so free as an actor. https://t.co/JMy1AVj7fd
— Movies Singapore (@MoviesSingapore) November 25, 2026
Also Read… சூர்யாவின் சீன் படத்திலிருந்து வெளியானது ஆத்தி இவ யார்ரா பாடல் வீடியோ!