அப்பாவ ரொம்ப மிஸ் பண்ணுறேன்.. பிக் பாஸில் எமோஷனலான டிடிஃஎப் வாசனின் குடும்பம்! – ப்ரோமோ இதோ!
Bigg Boss Season 10 TTF Vasan: தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியானது சிறப்பாக மக்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி தற்போது 12வது வாரத்தின் முடிவில் இருக்கும் நிலையில், பேமிலி வீக்-ஆக உள்ளது. டிடிஃஎப் வாசனின் குடும்பம் வீட்டிற்குள் வந்த நிலையில், வாசன் தனது தந்தையை மிஸ் செய்வது குறித்து பேசியுள்ளார். அது தொடர்பான ப்ரோமோ வைரலாகிவருகிறது.
சின்னத்திரை ரசிகர்களிடையே அதிகமாக வரவேற்பை பெற்றுவரும் ரியாலிட்டி ஷோவாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி (Bigg Boss Season 10 Show). இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக இருந்து கடந்த, சீசன் 8 நிகழ்ச்சி முதல் தொகுத்துவருகிறார். தற்போது பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி, கிட்டத்தட்ட 81வது நாளில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இன்னும் சில வாரங்கள் மட்டுமே நிறைவடைய இருக்கும் நிலையில், இந்த வாரம் முழுக்க பேமிலி வீக்-காக அமைந்துள்ளது. இந்த வாரத்தில் வினோத் பாபு, பிருத்வி, அன்சர் மற்றும் லக்ஷ்மி பிரியா ஆகியோரின் பெற்றோர்கள் மற்றும் குடும்பம் கடந்த 2 நாட்களாக வருகைதந்திருந்தனர்.
இன்று (26/11/2026) பிக் பாஸில் தன்யா (Dhayna) மற்றும் டிடிஃஎப் வாசன் (TTF Vasan) இருவரின் குடும்பமும் வந்துள்ளது. இந்நிலையில் தனது குடும்பத்தை சந்தித்த டிடிஃஎப் வாசன், தனது மறைந்த தந்தையை மிஸ் செய்வது குறித்து எமோஷனலாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: அதை நாகரீகமாக புரிந்துகொள்ள இங்க யாருமில்ல.. அரசியல் குறித்து பேசிய விஜய் சேதுபதி!
பிக் பாஸில் எமோஷனலான டிடிஃஎப் வாசனின் குடும்பம்:
இந்த ப்ரோமோ வீடியோவில் டிடிஃஎப் வாசன், “எனக்கு, எங்க அம்மாவுக்குமான பாசம், நான் 8-ஆம் வகுப்பு படிக்கும்வரையில் நன்றாக இருந்தது. அதன் பிறகு எங்க அப்பா, தவறியதுக்கு பிறகு, அம்மா அப்பாவாகவும் இருக்கவேண்டிய சூழ்நிலை அமைந்தது. அதன் பிறகு என் அம்மாவிடமிருந்து அந்த அன்பு எனக்கு தொடர்ந்து கிடைக்கவே இல்ல. அந்த அன்புக்காக ஏங்கி ஏங்கி.. மக்கள் எனக்கு அவ்வளவு அன்பு தரும்போது ரொம்பவுமே சந்தோஷமாக இருக்கும்.
இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த டிடிஎஃப் வாசனின் மனைவி மற்றும் அம்மா… வைரலாகும் வீடியோ!
நிறைய பேரின் அப்பா இந்த வீட்டுக்கு வரும்போது.. என்னுடைய அப்பாவை மிஸ் பண்ணுறேன். அதுவும் லக்ஷ்மி பிரியாவை பார்க்கும்போது, அப்பா வேற மிலிட்டரியில் இருந்தவாறா.. அதனால் ரொம்பவே மிஸ் பண்ணுனேன்” என அதில் வாசன் எமோஷனலாக பேசியிருந்தார். இதனால் அவரின் தாய் கண்ணீர் வெள்ளத்தில் இருந்தது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 81வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day81 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/de3roE8v4V
— Vijay Television (@vijaytelevision) November 26, 2026
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது 81வது நாளை கடந்து, இன்னும் சில வாரங்களுக்குழு இறுதிக்கட்டத்தை எட்டிவிடும். அந்த விதத்தில் டிக்கெட் டூ ஃபினாலே பாஸை தன்யா வென்றுள்ளார். அந்த வகையில் பிருத்வி, அன்சர் மற்றும் வினோத் பாபு என இந்த மூவரில், இருவர் இந்த வாரத்தில் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.