IND A vs SL A: ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் முதல் அரையிறுதி.. இந்தியா ஏ அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!
Asia Cup Rising Stars 2026: தோஹாவின் வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்து எகிறியும் வேகத்துடனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கும்.
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 (ACC Men’s Asia Cup Rising Stars 2026) தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ (IND A vs SL A) அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டன் திலக் வர்மா, இலங்கை ‘ஏ’ அணியின் கேப்டன் பவன் ரத்நாயக்காவை முதலில் பந்துவீச்சுக்கு அழைத்து, இந்த முக்கியமான போட்டியில் ஸ்கோரை நிர்ணயிக்க முடிவு செய்தார். கத்தாரின் தலைநகரான தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி முதலில் பேட்டிங் செய்யும். இந்தப் போட்டிக்காக இந்தியா ‘ஏ’ அணி தனது ஆடும் லெவனில் மாற்றங்களைச் செய்துள்ளது.
ALSO READ: ஆசிய கோப்பை ரைஸிங் ஸ்டார்ஸ்.. அரையிறுதியில் மோதும் இந்தியா ஏ vs இலங்கை ஏ!




தனுஷ் கோட்டியன் அறிமுகம்:
Our Playing XI for the all important semi-final 🙌
Updates ▶️ https://t.co/RbuCirmUmQ
#TeamIndia | #RisingStarsAsiaCup | #SLAvINDA https://t.co/sqodCK7aru
— BCCI (@BCCI) November 26, 2026
ஆஃப்-ஸ்பின்னர் தனுஷ் கோட்டியன் இந்த அரையிறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இந்திய அணிக்காக தனுஷ் கோட்டியன் அறிமுகமாகும் லிஸ்ட் ஏ போட்டியாகும். அணியின் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளர் சுனில் ஜோஷியிடமிருந்து தனுஷ் கோட்டியன் தனது இந்தியா ஏ அறிமுக தொப்பியைப் பெற்றார்.
பிட்ச் எப்படி..?
தோஹாவின் வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்து எகிறியும் வேகத்துடனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கும். ஆரம்பத்தில் நிதானமாக விளையாடுவது ஒரு பெரிய இன்னிங்ஸிற்கு வழிவகுக்கும்.
வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் பேட்ஸ்மேன்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தலாம், அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர்களும் மிடில் ஓவர்களில் தங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டியிருக்கும்.
ALSO READ: ராணாவுக்கு எதிராக புகார்.. பாகிஸ்தான் ஏ வீரர்கள் எடுத்த முக்கிய முடிவு!
இந்தியா ஏ அணி:
வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங், திலக் வர்மா (கேப்டன்), குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஷாபாஸ் அகமது, ஹர்ஷ் துபே, ஹர்ஷித் ராணா, அர்ஷத் கான், ஆயுஷ் படோனி, தனுஷ் கோட்யான், பிரின்ஸ் யாதவ்
இலங்கை ஏ அணி:
லசித் க்ருஸ்புலே, சினெத் ஜெயவர்தன, நிஷான் மதுஷ்க (வி.கே), பவன் ரத்நாயக்க (கேப்டன்), நிபுன் தனஞ்சய், ஜனித் லியனகே, வானூசா சஹான், லஹிரு சமரகோன், ரவிந்து பெர்னாண்டோ, துலாஜ் சமுதித, விஜயகாந்த் வியாஸ்காந்த், துலாஜ் சமுதித, விஜயகாந்த் வியாஸ்காந்த், துருகா ரன்கதுங்க, சாஜன்மி சங்கேத். ஹீனடிகல.