ஊழலுக்கு எதிரான நடவடிக்கையால் சிலரின் பேஸ்மட்டம் ஆட்டம் கண்டுள்ளது..கல்வி விருது வழங்கும் விழாவில் முதல்வர் விஜய்!
தவெக சார்பில் நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில் தமிழகத்தில் நிகழ்ந்த ஊழல் மற்றும் அரசியல் குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசினார்.
சென்னை, நீலாங்கரையில் 10, 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று வியாழக்கிழமை ( நவம்பர் 26- ஆம் தேதி) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக நான் எடுத்த நடவடிக்கையால் சிலரின் பேஸ்மட்டம் ஆடிப்போய் கிடைக்கிறது. கல்வித்துறையில் நிகழ்ந்த ஊழலை எப்படி சும்மா இருக்க முடியும். ஊழல் என்பது சமுதாயத்தில் ஒரு நாள்பட்ட நோய் போன்றது. எந்தத் துறையில் ஊழல் தப்பு நிகழ்ந்தாலும் தப்புதான். ஆனால், அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக இருந்து வரும் கல்வித்துறையில் சூழல் நிகழ்ந்தால் எப்படி சும்மா விடமுடியும். பள்ளிகள் பாதுகாப்பு விவகாரத்தில் முந்தைய ஆட்சியாளர்கள் விளையாடி உள்ளனர்.
எனது மேஜையில் 3 பைல்கள் இருப்பதாக தெரிவித்திருந்தேன். அதை திறந்து தான் பாருங்கள் என்று கூறினார்கள். தற்போது, நூலகத்தில் செயற்கை நுண்ணறிவு மூலமாக நூல்களில் முறைகேடு நிகழ்ந்துள்ளது. கோவை பெரியார் அறிவுலகம், திருச்சி பாரதியார் அறிவுலகம், கடலூர் அஞ்சலையம்மாள் அறிவுலகம் உள்ளிட்டவற்றில் ஊழல்கள் நிகழ்ந்துள்ளது. இது அறிவுலகமா அல்லது ஊழல் உலகமா என்று தெரியவில்லை. தமிழக மக்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் அரசியலுக்கு வந்திருப்பதாக சாதாரணமாக கூறவில்லை. உங்களது அண்ணன் உங்களை நல்ல வழியில் மட்டுமே நடத்தி கூட்டிட்டு போவார் என்று தெரிவித்தார்.
( தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வழங்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு டிவி9 தமிழுடன் இணைந்திருங்கள்)