AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இணையத்தில் வைரலாகும் அஜித் குமாரின் டேர் டெவில் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!

Dare Devil Movie Shooting Spot Photos | நடிகர் அஜித் குமார் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் டேர் டெவில். இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் அந்த ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் அஜித் குமாரின் டேர் டெவில் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!
அஜித் குமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Nov 2026 14:56 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார் (Ajith Kumar). இவரது நடிப்பில் இதுவரை மொத்தம் 63 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தொடர்ந்து சினிமாவில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தனது ரேஸிங் பணிகளை முடித்துவிட்டு மீண்டும் படத்தில் நடிக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித் குமார். அந்த வகையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் டேர் டெவில்.

இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்தர் எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தினை நடிகை ஷாலினி அஜித் குமார் தயாரித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தின் மூலமாக ஷாலினி தயாரிப்பாளராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரலாகும் டேர் டெவில் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்:

இந்த நிலையில் இந்த டேர் டெவில் படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெறும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முதல் ஷெடியூல் முடிந்ததாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் டேர் டெவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் அந்த புகைப்படத்தின் மூலம் டேர் டெவில் படத்தில் அஜித் குமாரின் லுக் எப்படி உள்ளது என்பது வெளியாகி உள்ளது. அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… Ruhani Sharma: துல்கரின் ஏஓடி படத்தில் நடித்த அனுபவம் பகிர்ந்த நடிகை ரூஹானி ஷர்மா!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… 5 ஆண்டுகளைக் கடந்தது சிலம்பரசனின் மாநாடு – தயாரிப்பாளர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு

Follow Us