AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சிலம்பரசனின் அரசன் பட ப்ரோமோ வெளியீடு எப்போது இருக்கும்? ட்ரெயின் பட ரிலீஸில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

Arasan Movie Promo Release Update: சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்திலும், சிலம்பரசனின் நடிப்பிலும் உருவாகியுள்ள புதிய படம்தான் அரசன். இந்த படத்தின் ப்ரோமோவின் மீது ரசிகர்களுக்கு பெரும் ஆர்வம் இருந்த நிலையில், முக்கியமான அப்டேட் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

சிலம்பரசனின் அரசன் பட ப்ரோமோ வெளியீடு எப்போது இருக்கும்? ட்ரெயின் பட ரிலீஸில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
அரசன் திரைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 26 Nov 2026 14:13 PM IST

கோலிவுட் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் வெற்றிமாறன் (Director Vetri Maaran). இவரின் இயக்கத்தில் தமிழில் ரசிகர்களிடையே அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் திரைப்படமாக அமைந்ததுதான் அரசன் (Arasan Movie). இதில் நடிகர் சிலம்பரசன் (Silambarasan) ஹீரோவாக நடிக்க, வெற்றிமாறன் சிறப்பாக இயக்கிவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் 2025ம் ஆண்டு இறுதியிலிருந்து ஆரம்பமான நிலையில், சிறப்பாக படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த திரைப்படத்துடன் வெற்றிமாறன், ராஜன் வகையறா (Rajan Vagaiyara Movie) என்ற படத்தையும் இயக்கிவருகிறார். இந்த இரு படங்களின் ஷூட்டிங் ஒன்றாக நடைபெற்றுவரும் நிலையில், 2027ம் ஆண்டில் இந்த படங்கள் ஒன்றின்பின் ஒன்றாக வெளியாகும் என கூறப்படுகிறது.

அந்த விதத்தில் 2026ம் ஆண்டு தீபாவளியுடன் அரசன் படத்தின் 8 நிமிட ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் படக்குழு ஒரு சிறிய கிளிம்ப்ஸ் மட்டுமே வெளியிட்டிருந்தது. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் தற்போது சிலம்பரசனின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸான விஷயம் ஒன்று இருக்கிறது.

இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த டிடிஎஃப் வாசனின் மனைவி மற்றும் அம்மா… வைரலாகும் வீடியோ!

சிலம்பரசனின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்:

சிலம்பரசனின் அரசன் படத்தின் 8 நிமிடம் கொண்ட “வேர்ல்ட் ஆப் அரசன்” ப்ரோமோ, விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் கூட்டணியில் உருவான ட்ரெயின் படத்தின் திரையரங்கு ரிலீஸின்போது திரையிடப்படவுள்ளதாம். அரசன் படத்தையும், விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தையும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள நிலையில், இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: என்னது தர்மன் அந்த அனிமே சீரிஸின் ரீமேக்-ஆ? – இணையத்தில் வைரலாகும் தகவல்!

வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியில் விஜய் சேதுபதியின் ட்ரெயின் படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் வெளியீட்டின்போது அரசன் திரைப்படத்தின் ப்ரோமோ வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

சிலம்பரசனின் அரசன் திரைப்பட ப்ரோமோ ரிலீஸ் பற்றி இணையத்தில் வைரலாகும் பதிவு:


இந்த அரசன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, விஜய் சேதுபதி, அமீர், யோகலட்சுமி, பிரியங்கா மோகன் மற்றும் ஆண்ட்ரியா உள்ளட்ட வட சென்னை படத்தில் பணியாற்றிய நடிகர்களும் இப்படத்தில் இணைந்து நடித்துவருகிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இன்னும் சில வாரங்களில் முழுமையாக நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது.

Follow Us