விமலின் நவோரியா திரைப்படத்தின் ப்ரோமோ பாடலை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!
Navoria Movie First Song: தமிழில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விமல். இவரின் நடிப்பிலும், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம்தான் நவோரியா. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ள நிலையில், தற்போது இதன் ப்ரோமோ பாடல் வெளியாகியுள்ளது. இதை ஜி.வி.பிரகாஷ் குமார் பகிர்ந்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் தனது நடிப்பு மற்றும் நகைச்சுவை மூலமாக மக்களிடையே பிரபலமான நடிகராக இருந்துவருபவர் விமல் (Vemal). இவரின் நடிப்பில் இறுதியாக சண்டைக்காரி (Sandakari Movie) என்ற திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகியிருந்தது. இந்த படமானது இவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பிறகு இயக்குநர் சிம்புதேவன் (Director Chimbu Devan) இயக்கத்தில் உருவாகிவந்த திரைப்படம்தான் நவோரியா (Navoria Movie). இந்த படத்தில் நடிகர் விமல் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அன் ஷீத்தல் (Ann Sheetal) என்ற நடிகை இணைந்து நடித்துள்ளார். இந்த படமானது பேண்டஸி அட்வெஞ்சர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகமாக உள்ளது.
இப்படத்திற்கு தமிழ் இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ள நிலையில், இந்த படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அமைந்துள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நவோரியா ப்ரோமோ பாடலான இதை, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தினை இயக்கும் நானி பட இயக்குநர்? வைரலாகும் தகவல்
விமலின் நவோரியா முதல் பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Best of luck team …Happy to unveil the First Single #Navoria Promo Song from #Navoria!
Link
https://t.co/Y09XS6UtdRMy best wishes to the entire team of #Navoria for a grand success! 😊
#Navoria Releasing worldwide in theatres from December 18
Produced By @tpcdreamhouse
Directed By @chimbu_deven ❤️
@ActorVemal @Aariarujunan @annsheetal1 @Bala_actor #ThambiRamaiah
A @immancomposer Musical
@dopmsukumar @sreejithsarang
@silvastunt
@SaktheeArtDir @keerthivasanA
#Sridhar #Dastha
#Rokesh @SPictureFilms @saregamasouth @onlynikil #DigitallyPowerful#NavoriafromDecember18
— G.V.Prakash Kumar (@gvprakash) November 25, 2026
இந்த படத்தில் நடிகர் விமல் ஹீரோவாக நடிக்க, அவருடன் பிக் பாஸ் ஆரி அர்ஜுனன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர்கள் தம்பி ராமையா, பாலா சரவணன், அப்புக்குட்டி, வடிவுக்கரசி, பாலாஜி சக்திவேல், நிழல்கள் ரவி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது ஸ்க்விட் கேம் திரைப்படப் பாணியில், கற்பனை, நகைச்சுவை மற்றும் பெரும் சவால்கள் நிறைந்த உயிர் பிழைத்தல் கூறுகளை இணைத்து, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் ஐந்து சிறுவயது நண்பர்கள், காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டிய ஒரு பந்தயத்தில் தங்களைக் கண்டுகொள்வதை இந்த கதை இருக்கிறதாம்.
இதையும் படிங்க: அபிஷன் ஜீவிந்தின் குரலில்.. பிக்காசோ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் அறிவிப்பு ப்ரோமோ வெளியீடு!
இந்த படமானது பேண்டஸி அட்வெஞ்சர் கதைக்களத்தில் இப்படமானது உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதிக்குள் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது இப்படத்திலிருந்து தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகும் என கூறப்படுகிறது.