Picasso: அபிஷன் ஜீவிந்தின் குரலில்.. பிக்காசோ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் அறிவிப்பு ப்ரோமோ வெளியீடு!
Picasso Movie First Single: தமிழில் இளம் இயக்குநராக நுழைந்து, தற்போது படங்களில் ஹீரோவாக பணியாற்றுவருபவர் அபிஷன் ஜீவிந்த். இவரின் நடிப்பில் 2வது உருவாகிவரும் திரைப்படம்தான் பிக்காசோ. இப்படத்திற்கு இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள நிலையில், முதல் ரிலீஸ் ப்ரோமோவை படக்குழு பகிர்ந்துள்ளது.
கோலிவுட் சினிமாவில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான டூரிஸ்ட் பேமிலி (Tourist Family Movie) என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக நுழைந்தவர்தான் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth). இவர் இந்த படத்தில் இயக்குநராக அறிமுகமானாலும், இப்படத்தில் கேமியோவாக சிறு வேடத்தில் நடிதித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு இவர் தமிழில் வித் லவ் (With Love) என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை இயக்குநர் மதன் இயக்கியிருந்த நிலையில், இவருக்கு ஹீரோவாக சிறப்பான வரவேற்பை கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு அபிஷன் ஜீவிந்த், அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் (Director Gowtham Sivaraman) இயக்கத்தில் இணைந்து நடித்துவந்த திரைப்படம்தான் பிக்காசோ (Picasso Movie). இந்த படத்தில் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாகா நடிக்க, கன்னட நடிகர் சிவராஜ்குமார் (Shivarajkumar) இதில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு தமிழ் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துவரும் நிலையில், முதல் பாடல் ரில்சி அறிவிப்பு ப்ரோமோ வெளியாகியுள்ளது. “ஹகுனாமாட்டடா” பாடலை (Hakunamatata Song) அபிஷன் ஜீவிந்த் பாடியுள்ள நிலையில், வரும் 2026 நவம்பர் 27ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




இதையும் படிங்க: சிக்னல் அட் லெவன் தேர்ட்டி படத்திலிருந்து வெளியானது 3-வது சிங்கிள் வீடியோ!
பிக்காசோ திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து அபிஷன் ஜீவிந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Hakunamatata from 27th !! 🎧♥️
Vaanga nanbaragale ellam sendhu Padalam 🙂
#Picasso https://t.co/6WuhEL4YD8— Abishan Jeevinth (@Abishanjeevinth) November 25, 2026
பிக்காசோ திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது:
இந்த பிக்காசோ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்க, டிராமா கம்பெனி என்ற புதிய தயாரிப்பு நிறுவனமானது இந்த படத்தை தயாரித்துவருகிறது. இந்த படத்தில் நடிகர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக டூரிஸ்ட் பேமிலி நடிகை யோகலட்சுமி மற்றும் ஷிவானி நகரம் என இரு நடிகைகள் இணைந்து நடித்துவருகிறார்கள். இதில் கன்னட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிவராஜ்குமார் மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் பிக் பாஸ் கானா வினோத் இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆச்சி ஆச்சி காமாட்சி.. விஜய் சேதுபதி – சாய் பல்லவியின் இஞ்சி வெல்லம் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
இப்படத்திற்கு இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துவரும் நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளதாம். இந்த படமானது அப்பா -மகன் பாசம் மற்றும் குடும்ப கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகளில் சிறப்பாக உள்ளது. இந்நிலையில் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது.