AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தினை இயக்கும் நானி பட இயக்குநர்? வைரலாகும் தகவல்

Sivakarthikeyan Next Movie Update Here | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தினை நானியின் பட இயக்குநர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தினை இயக்கும் நானி பட இயக்குநர்? வைரலாகும் தகவல்
சிவகார்த்திகேயன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Nov 2026 17:33 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி படங்களையும் தயாரித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது போல தயாரிப்பில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இறுதியாக பராசக்தி படம் தமிழ் சினிமாவில் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி வரும் சேயோன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் எந்த இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்து தகவல்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தினை இயக்கும் நானி பட இயக்குநர்?

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து மீண்டும் தெலுங்கு சினிமா இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கு சினிமாவில் நடிகர் நானி நடிப்பில் வெளியான படம் சரிபோதா சனிவாரம் படம். இந்தப் படம் திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படத்தினை இயக்கிய இயக்குநர் விவேக் ஆத்ரேயா நடிகர் சிவகார்த்திகேயனின் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தக் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… தகப்பன் படத்திற்கு சென்சார் குழு கொடுத்த சான்றிதழ் என்ன தெரியுமா? வெளியானது அப்டேட்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இணையத்தில் கவனத்தை ஈர்க்கும் நாகர்ஜுனாவின் கிங் 100 படத்தின் புது போஸ்டர்!

Follow Us