இணையத்தில் கவனத்தை ஈர்க்கும் நாகர்ஜுனாவின் கிங் 100 படத்தின் புது போஸ்டர்!
Nagarjunas King 100 Movie New Poster | நடிகர் நாகர்ஜுனா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் கிங் 100. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் படத்தின் புதிய போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் நாகர்ஜுனா (Nagarjuna). இவரது நடிப்பில் தெலுங்கு மொழியில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய மொழி ரசிகர்களிடையேயும் அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும் நடிகர் நாகர்ஜுனா மற்ற பான் இந்திய மொழிகளிலும் அவ்வபோது படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு சினிமாவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் நாகர்ஜுனாவிற்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் குறைவான அளவில் தமிழ் மொழியில் படங்களில் நடித்து இருந்தாலும் அந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் நாகர்ஜுனா தமிழ் மொழியில் இறுதியாக நடிகர் ரஜினிகாந்த்திற்கு வில்லனாக கூலி படத்தில் நடித்து இருந்தார். அதில் நாகர்ஜுனாவின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவில் நாகர்ஜுனா நடிப்பில் உருவாகி உள்ள படம் கிங் 100.




இணையத்தில் கவனத்தை ஈர்க்கும் கிங் 100 படத்தின் புது போஸ்டர்:
இந்த கிங் 100 படத்தை இயக்குநர் ரா. கார்த்திக் எழுதி இயக்கி உள்ளர். தெலுங்கு மொழியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் நாகர்ஜுனா உடன் இணைந்து நடிகர்கள் தபு, அசோக் செல்வன், ஐஸ்வர்யா ராஜேஷ், சுஷ்மிதா பட் மற்றும் ரவீந்திர விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 24-ம் தேதி டிசம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் படக்குழு ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ஃபகத் பாசில் – பிரேம் குமார் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் அப்டேட் இதோ!
கிங் 100 படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
30 DAYS for the KING to REIGN SUPREME ON THE BIG SCREENS 👑🔥
#King100 𝐈𝐍 𝐂𝐈𝐍𝐄𝐌𝐀𝐒 𝐃𝐄𝐂𝐄𝐌𝐁𝐄𝐑 𝟐𝟒𝐭𝐡, 𝟐𝟎𝟐𝟔 ❤🔥
King @iamnagarjuna #Tabu @ThisIsDSP
@AshokSelvan @Rakarthik_dir @ravindravijay1 @aishu_dil
@sush_bhat94 @rajamahadhevan @NavinNooli @ArtSathees
@CVRao74 @lemonsprasad
#SupriyaYarlagadda @TSeriesSouth @AnnapurnaStdios— Annapurna Studios (@AnnapurnaStdios) November 24, 2026
Also Read… ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் ஆர்யவின் ஹெலோ காதல் படத்தின் ட்ரெய்லர்