உணர்வுகளால் நிரம்பிய பிக்பாஸ் வீடு… கண்கலங்கிய லக்ஷ்மி பிரியா மற்றும் குடும்பத்தினர் – வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் 12-வது வாரம் சென்று கொண்டு இருக்கின்றது. இந்த வாரத்தில் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் ஒவ்வொரு குடும்பத்தினர் உள்ளே தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் தமிழ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஃபேமிலி வாரம் என்பது நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் தொடர்ந்து 100 நாட்களுக்கு மேலாக எந்தவிதமான வெளி உலக தொடர்பும் இல்லாமல் போட்டியை விளையாடி வருவார்கள். இவர்களை ஊக்கபப்டுத்தும் விதமாகவும் அவர்களின் போட்டி அடுத்ததாக எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் இந்த ஃபேமிலி வாரம் வைக்கப்படுவது வழக்கம். பல போட்டியாளர்கள் இந்த நிகழ்சியில் கலந்துகொள்வதே வெற்றிபெறுவதற்காக இல்லை. தங்களது குடும்பத்தினரை உலக மக்களுக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் காட்ட வேண்டும் என்பதாகவே இருக்கும். அப்படி இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் அதற்கு முன்னதாக வெளியேறினால் இதனை குறிப்பிட்டு சொல்லியுள்ளனர். இந்த நிலையில் இந்த 12-வது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஃபேமிலி வீக் நடைபெறுகின்றது.
இந்த நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்களின் குடும்பத்தினர் இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டிற்குள் வருகின்றனர். அந்த வகையில் இன்று வினோத் பாபு மற்றும் லக்ஷ்மி பிரியாவின் குடும்பத்தினர் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டிற்குள் வருகை தருகின்றனர்.




பிக்பாஸில் கண்கலங்கிய லக்ஷ்மி பிரியா மற்றும் குடும்பத்தினர்:
இந்த நிலையில் இன்று 79-வது நாளிற்கான மூன்றாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் லக்ஷ்மி பிரியா தனது குடும்பத்தினர் மீது எவ்வளவு பாசம் வைத்திருப்பதாகவும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மன வருத்தத்தைப் பற்றியும் பேசுகிறார். மேலும் லக்ஷ்மி பிரியாவின் அம்மா மற்றும் அப்பா இருவரும் முந்தைய காலத்தில் தங்களது நடவடிக்கை லக்ஷ்மி பிரியாவை பாதித்தது குறித்தும் அதற்காக அவரிடம் மன்னிப்பும் கோரினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… புதுப் பட தயாரிப்பாளருடன் விஷாலுக்கு பிரச்சனையா? வைரலாகும் தகவல்
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#Day79 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/tbrAIUV9uA
— Vijay Television (@vijaytelevision) November 24, 2026
Also Read… நான் அடுத்தடுத்தப் பாகங்களாக எடுக்க நினைத்த படம் அதுதான் – இயக்குநர் மிஷ்கின் ஓபன் டாக்