AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மன் பட கிளிம்ப்ஸ் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Dharman Movie Glimpse Update: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் சினிமாவில் இதுவரைக்கும் 172 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், 173வது திரைப்படமாக உருவாகிவருவதுதான் தர்மன். இந்த படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இதன் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ எப்போது வெளியாகும் என இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மன் பட கிளிம்ப்ஸ் எப்போது ரிலீஸ் தெரியுமா?
தர்மன் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 Nov 2026 16:11 PM IST

கோலிவுட் சினிமாவில் நடிகர்களே கொண்டாடும் முன்னணி ஹீரோவாக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான பான் இந்திய திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதன் வெற்றியை அடுத்ததாக தற்போது டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Director Ashwath Marimuthu) இயக்கத்தில், தர்மன் (Dharman Movie) என்ற படத்தில் ரஜினிகாந்த் பணியாற்றிவருகிறார். இந்த திரைப்படத்தின் 2 கட்ட ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், ரஜினிகாந்த் சமீபத்தில் அனிருத் (Anirudh) திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார்.

இதன் பிறகு மீண்டும் தர்மன் படத்தின் ஷூட்டிங்கில் விரைவில் இணைவார் என கூறப்படுகிறது. அந்த விதத்தில் இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: தனுஷின் 46-வது படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்

ரஜினிகாந்தின் தர்மன் திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் ரிலீஸ் எப்போது:

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூட்டணியில் மாபெரும் படமாக தர்மன் திரைப்படம் உருவாகிவருகிறது. இதில் ரஜினிகாந்துடன் சிம்ரன், ராஷி கண்ணா, நயன்தாரா, ஸ்ரீலீலா மற்றும் தெலுங்கு நடிகர் ராம் போதினேனி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் இணைந்து நடித்துவருகிறார்கள். மேலும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துவருகிறது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜுடன் படம் பண்ணபோறேன் – மிஷ்கின் ஓபன் டாக்!

இவ்வாறு பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகிவரும் தர்மன் படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை அவரின் பிறந்தநாளான 2026 டிசம்பர் 12ம் தேதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். அனிருத் இதற்கு இசையமைத்தால் இது தயாராகிவிடுமாம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

தர்மன் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

தற்போது இப்படமானது 2வது ஷெட்டியூல் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக தயாராகிவருகிறது. அடுத்தகட்ட ஷூட்டிங் தொடங்கி படத்தை முழுவதுமாக முடிப்பதற்கு படக்குழு திட்டமிடுகிறதாம். மேலும் 2027ம் ஆண்டு ஏப்ரல் 29 தேதியில் படத்தை வெளியிடுவதற்கு படக்குழு பிளான் செய்துவருவதாகவும் வட்டாரங்களில் தகவல்கள் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us