AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தனுஷின் 46-வது படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்

Dhanush 56 movie shooting update | நடிகர் தனுஷ் தற்போது தனது 56-வது படத்தின் படப்பிடிப்பில் அதிக அளவில் கவனத்தை செலுத்தி வருகின்றார். இந்த நிலையில் இந்தப் படத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் ரிலீஸ் குறித்த தகவல்கள் வைரலாகி வருகின்றது.

தனுஷின் 46-வது படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்
தனுஷ் 56 படக்குழுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Nov 2026 14:12 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் அவ்வபோது படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த சில படங்கள் தொடர்ந்து தமிழ் மொழியிலேயே உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ் மொழியில் அடுத்தடுத்து நடிகர் தனுஷ் நடிப்பில் படங்கள் பிசியாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் நடிகர் தனுஷ் நடிப்பில் கர மற்றும் ஓ.எம் என இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது.

இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான ஓ.எம் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்த ஓ.எம் படம் 100 கோடிகளை வசூலில் கடந்துள்ளது. இந்த நிலையில் தனுஷின் அடுத்தப் படமான 56-வது படம் தொடர்பான அப்டேட் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தனுஷின் 46-வது படத்தின் தற்போதைய நிலை என்ன?

அதன்படி சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, தனுஷ் 56 திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தீவிரமான சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட பல முக்கியமான பகுதிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய படப்பிடிப்பு கட்டத்தில் தனுஷ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இப்படம் 2027-ஆம் ஆண்டு கோடைகாலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சென்சார் பிரச்சனையை எதிர்கொள்ளும் மணிகண்டனின் மக்கள் காவலன் படம்? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நட்புக்காக படத்தின் முதல் சாய்ஸ் சரத்குமார் கிடையாது – தயாரிப்பாளர் விளக்கம்

Follow Us