AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உடலில் காயங்கள் இருந்தது உறுதியான நிலையில் ஏன் நடவடிக்கை இல்லை? காவல் நிலைய மரண வழக்கில் நீதிமன்றம் கேள்வி

Chekanurani Custodial Death Case : உடற்கூராய்வில் காயங்கள் உறுதியான நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விசாரணை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

உடலில் காயங்கள் இருந்தது உறுதியான நிலையில் ஏன் நடவடிக்கை இல்லை? காவல் நிலைய மரண வழக்கில் நீதிமன்றம் கேள்வி
செக்கானூரணி காவல் நிலைய மரண வழக்கு
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 24 Nov 2026 13:57 PM IST

சென்னை, நவம்பர் 24 : செக்கானூரணி காவல் மரணம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை (High Court) எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடற்கூராய்வில் காயங்கள் உறுதியான நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விசாரணை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

‘உடலில் காயங்கள் இருந்தது உறுதியான நிலையில் ஏன் நடவடிக்கை இல்லை?’

மதுரை அருகே ஏலக்காய் ஏற்றி வந்த தனது லாரியில் தீப்பற்றி எரிந்ததாக லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அவரை சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த நவம்பர் 14, 2026 அன்று அவர் திடீரென உடல் நலக்குறைவால் விபரீத முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது கணவர் விபரீத முடிவெடுப்பதற்கு வாய்ப்பு இல்லை எனவும் காவல்துறையினர் அவரை துன்புறுத்தியிருக்கின்றனர் எனவும் அவரது மனைவி புகார் தெரிவித்தார்.

இதையும் படிக்க : பல மாதங்களாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம் – கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் நீதிபதி கேள்வி

இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர்கள் பழனிவேல்ராஜன், கலைச்செல்வி ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பாலகிருஷ்ணன் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில் அவரது உடலில் ரத்த காயங்கள், கழுத்து இறுக்கப்பட்டது, இதயம், மூளை, நுரையீரலில் வீக்கட் இருந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். உடற்கூராய்வில் பாலகிருஷ்ணன் உடலில் காயங்கள் இருந்தது உறுதியான நிலையிலும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்து வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

சிசிடிவி காட்சிகளை வெளியான எப்படி என நீதிமன்றம் கேள்வி

முன்னதாக மதுரை செக்கானூரணி காவல் மரணம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது எப்படி?; சில சிசிடிவி காட்சிகளை மட்டும் கசியவிட்ட உயர் அதிகாரி யார்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும், சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து, அதன் 2 நகல்களை சீலிட்ட கவரில் சமர்ப்பிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அநாகரிக மெசேஜ் அனுப்பிய குற்றச்சாட்டில் கலெக்டர் கடந்த ஜூலை, 2026 மாதமே புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, யாரையும் காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் தமிழக காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் செக்கானூரணி காவல் நிலைய மரண வழக்கில் உடற்கூராய்வில் உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உடலில் காயங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us