AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

234 தொகுதிகளிலும் நற்பணி இயக்கம் – உள்ளாட்சித் தேர்தல் – தனுஷின் மாஸ்டர் பிளான்

- Engish prefix Dhanush Narpani Iyakkam Expansion Plan : உள்ளாட்சித் தேர்தல் வரும் நிலையில் தனது நற்பணி இயக்கத்தை 234 தொகுதிகளிலும் விரிவுபடுத்த தனுஷ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாக அமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

234 தொகுதிகளிலும் நற்பணி இயக்கம் – உள்ளாட்சித் தேர்தல் –  தனுஷின் மாஸ்டர் பிளான்
நடிகர் தனுஷ்
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 Nov 2026 13:14 PM IST

 

சென்னை, நவம்பர் 24 : உள்ளாட்சித் தேர்தல் வரும் நிலையில் தனது நற்பணி இயக்கத்தை 234 தொகுதிகளிலும் விரிவுபடுத்த தனுஷ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாக அமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷின் அடுத்தடுத்த நகர்வுகள் அவரது அரசியல் வருகையை உறுதி செய்யும் விதமாக அமைந்து வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தனுஷின் மாஸ்டர் பிளான்

அந்த வகையில் 234 தொகுதிகளுக்கும் நற்பணி இயக்கத்தை விரிவுபடுத்தும் நடிகர் தனுஷ், 100க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாக அமைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தனுஷ் அதிமுகவில் இணைந்தால் அவரை  வரவேற்போம் என, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க : வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை – பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம் – திருநெல்வேலியில் பரபரப்பு

இந்த நிலையில் தனது நற்பணி இயக்கத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். தற்போது மாநிலம் முழுவதும் 58 அமைப்பு ரீதியான மாவட்ட அலகுகள்செயல்பட்டு வரும் நிலையில், அடுத்த கட்டமாக தமிழ்நாட்டின் 38 வருவாய் மாவட்டங்களிலும் 100க்கும் மேற்பட்ட மாவட்ட அலகுகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் தனுஷின் நற்பணி இயக்க நிர்வாகிகள் போட்டியிடவுள்ளதாகவும் அதற்கான முன்னோட்டமாக 234 தொகுதிகளிலும் நிர்வாகத்தை விரிவாக முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2026 அக்டோபர் 15 அன்று நடைபெற்ற ரசிகர் மன்ற விழாவில், தனுஷின் ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டு, அதற்கான கொடியும் இலச்சினையும் அறிமுகப்படுத்தப்பட்டன. தொகுதி வாரியாக நற்பணி இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளும், நிர்வாகிகள் சந்திப்புகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுதவிர, டெல்லியில் சில முக்கியப் பிரமுகர்களை அவர் சந்தித்ததாகவும், புதிய கட்சிக்கான பெயர் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் உலவுகின்றன. ஆனால், இவை எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

தனுஷின் நற்பணி இயக்கம் சார்பாக டியூசன் சென்டர்

இதற்கிடையில் சமீபத்தில் தனுஷ் நற்பணி இயக்கம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு டியூஷன் மையம் அமைக்கப்படவுள்ளது. அனைத்து மையங்களும் ஏசி வசதியுடன் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை சமீபத்தில் ஓம் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் உறுதிபடுத்தினார்.

இதையும் படிக்க : வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்கள் – வனத்துறையினர் இடையே வாக்குவாதம்.. கார்த்திகை தீபத் திருநாளில் அனுமதி மறுத்ததால் பரபரப்பு!

மேலும், ஒவ்வொரு மையத்திலும் 3 ஆசிரியர்களும் ஒரு உதவியாளரும் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும் எனவும் மாநிலம் முழுவதும் சுமார் 700 ஆசிரியர்களும் 234 உதவியாளர்களும் பணியமர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகள் வரும் 2027 ஜனவரி மாதம் முதல் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு, தலா 20 கிராம் எடையுள்ள வெள்ளி விளக்கு பரிசாக வழங்கப்பட்டது.

Follow Us